பக்கம்:பனித்துளி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 பனித்துளி

கொண்டு கூடத்துக்கு வந்தாள். வரும் போது, வராத்தாவில் தனியாக நிற்கும் சங்கரனை அவள்ால் கவனிக்காமல் செல்ல முடியவில்லை.

காமு என்னை நினைவிருக்கிறதா உனக்கு? பட்டினத் துக்கு எப்போது வந்தாய்?’ என்று சங்கரன் மெதுவாகக் கேட்டான். காமு அவள் பெற்றோருடன் பட்டினம் வந்திருக்கிறாளா அல்லது அவளுக்குக் கல்யாணமாகிக் கணவனுடன் வந்திருக்கிறாளா என்று அறிந்து கொள்ள வேண்டுமென்கிற காரணத்தாலேயே சங்கரன் அவளை அவ்விதம் கேட்டான்.

“நாங்கள் பட்டினம் வந்து கி ட் ட த் தட்ட ஒரு வருஷத்துக்கு மேல் ஆகிறதே. கிராமத்தில் வீட்டை விற்று விட்டோம். அந்தப் பணத்தை வைத்து அப்பா ஒரு கடை வைத்திருக்கிறார். நான் டிரெயினிங் படிக்கிறேன்’காமு பழைய சம்பவங்களை மறந்துவிட்டு அவனுடன் பேசினாள். பிறகு, “அம்மாவுக்குத்தான் உடம்பு சரியாக இல்லை. அவளுக்கு ஒரே கவலை என்னைப்பற்றி, எனக்குக் கல்யாணம் ஆக வில்லையாம். உருகிப் போகிறாள்!” என்றாள்.

அதற்குள் கமலா நீலாவுடன் பேசிக் கொண்டு அந்தப் பக்கம் வருவது கேட்கவே அவசரமாக, “எங்கள் வீட்டிற்கு வாருங்கள். அப்பாவுக்கு உங்களைப் பார்த்தால் சந்தோஷ மாக இருக்கும்” என்று கூறிவிட்டு காமு அங்கிருந்து போய் கமலாவுடன் சேர்ந்து கொண்டாள்.

பொன்மணியில் பார்த்த காமுவா அவள்? ஒரு வார்த்தை பேசுவதற்கு எவ்வளவு திணறிப் போய்விட்டாள் அப்போது? அவளை ஏமாற்றியவனை எவ்வளவு அன்பாக தன் வீட்டிற்கு வரும்படி அழைக்கிறாள்? என்ன கள்ளமற்ற உள்ளம்? போதாததற்கு அவனைப் பார்த்தால் அவள் தாப்பனாரும் சந்தோஷப்படுவார் என்று வேறு பெருமை அடித்துக் கொள்கிறாள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/118&oldid=682214" இலிருந்து மீள்விக்கப்பட்டது