பக்கம்:பனித்துளி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி 121

பற்றிப் பேசுவது என்பது புரியாமல் திகைத்தான் சங்கரன். ராமபத்திர அய்யர் சிறிது யோசித்தபடி உட்கார்ந்திருந் தார். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டவர்போல், ‘சங்கரா! உன் மன்னி குழந்தையோடு பிறந்த வீட்டில் இருந்தாளே, அங்கே தான் இருக்கிறாளா, வந்து விட்டாளா?’ என்று கேட்டார்.

“அவள் வந்து ரொம்ப நாளாச்சே! இங்கே தான் இருக்கிறாள். அவள் இராவிட்டால் அப்பாவுக்குச் சரிப்படு றெதில்லை. அவருடைய வேலை யெல்லாம் மன்னிதான் கவனித்துக் கொள்கிறாள்’ என்றான் சங்கரன்.

“பாவம் ரொம்பவும் செல்லமாக வளர்ந்த பெண். நல்ல இடத்தில் தான் வாழ்க்கைப் பட்டாள்; இருந்தாலும் அதிர்ஷ்டம் என்பது அலாதியாக இருக்கிறது அப்பா’ என்றார் அவர். me

‘வீட்டிலே எல்லா வேலைகளையும் கவனித்துக் கொள்கிறாள் மாமா, ரொம்பவும் பொறுமைசாலி.”

“பொறுமைசாலியாக ஒருத்தி இராவிட்டால் அடங்காப் பிடாரிகளின் ராஜ்யம் குடும்பத்தில் நடக்குமா!’ என்று காமு மனத்துக்குள் நினைத்துக் கொண்டாள். சங்கரன் எதற்காக அவர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறான் என்பதே தகப்பனார் பெண் இருவருக்கும் புரியவில்லை.

மத்தியானத் தூக்கம் கலைந்து விசாலாட்சி விழித்துக் கொண்டபோது கூடத்தில் சங்கரன் உட்கார் ந்திருப்பதைப் பார்த்தாள். ‘இதென்ன விசித்திரம்! யாரால் காமுவின் வாழ்வு பாதிக்கப்பட்டதோ, யாரைக் காமு மறக்க முடியாமல் திண்டாடுகிறாளோ அவன் இங்கு உட்கார்ந் ருெக்கிறான். திரும் வு சங்க ன் இங்கு எதற்காக வர வேண்டும்? பட்டினம் வருவதற்குப் பொன்மணியில் வண்டி ாறிப் புறப்பட்டு வந்து கொண்டிருக்கும் போ து: 1.அவர்களால் நமக்கு என்ன ஆகவேண்டும் அப்பா, அவர்கள் விட்டுக்கு நாம் ஏன் போக வேண்டும்?’ என்று கூறிய காமு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/123&oldid=682220" இலிருந்து மீள்விக்கப்பட்டது