பக்கம்:பனித்துளி.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பனித்துளி

இன்று அதே சங்கரனுக்குக் காபி கொடுத்து உபசரிக் கிறாளே?”

விசாலாட்சிக்கு இது விசித்திரமாகத் தான் இருந்தது. புடவைத் தலைப்பை உதறிக் கட்டிக்கொண்டு எழுந்திருந்த வளைப் பார்த்துக் கைகூப்பி, ‘மாமி! என்னைத்தெரிகிறதா உங்களுக்கு? ரொம்பவும் இளைத்துப் போயிருக்கிறீர்களே?’’ என்று கேட்டான் சங்கரன்.

‘இவன் ஏன் இங்கு வந்தான்? காமு இன்று வைாாக்கியத்

துடன் விவாகத்தை மறுக்கும் அளவு அவள் மனத்தைப் புண்ணாக்கியவன் எதற்காக இங்கே வந்திருக்கிறான்? இவ்வித ஆத்திரத்தோடு விசாலாட்சி தெரியாமல் என்ன அப்பா? மனுஷாளை மறந்து போகும் அளவு நினைவு தப்பி விடவில்லை எனக்கு!’ என்று கூறிவிட்டு சமையலறைக்குள் சென்று விட்டாள். == -

சங்கரனின் மனம் மறுபடியும் வெட்கியது. உணர்ச்சி வசத்தில் ஏதேதோ கூறிச் சென்று பிறகு, அவைகளை மறந்தவன் சங்கரன்தானே?

நேரமாகி விட்டது மாமா! நீங்கள் அவசியம் எங்கள் வீட்டிற்கு வாருங்கள். அப்பாவிடமும் சொல்லுகிறேன். காமுவையும் அழைத்து வாருங்கள். என் மனைவி அழைத்து வரச் சொன்னாள்’ என்று கூறி விட்டு காமுவிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டான் சங்கரன்.

ஆகட்டும், பார்க்கலாம். மாமி சொன்னதை மனத்தில் வைத்துக் கொள்ளாதே சங்கரா காமுவுக்குக் கல்யாணம் ஆகவில்லை என்று கண்டவர்கள் பேரில் எரிந்து விழுந்து கொண்டிருக்கிறாள்’ என்று இன்னும் ஏதேதோ சொல்லிக் கொண்டு வாசல் வரையில் வழி அனுப்ப வந்தார்.ராமபத்திர அய்யர். ==

காரில் சென்று கொண்டிருக்கும் போது சங்கரன் பல விதமாக எண்ணமிட்டான். காமு அவனை மறக்கவில்லை. அவன் கூறிய வார்த்தைகளை மறக்கவில்லை. சொல்லுக்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/124&oldid=682221" இலிருந்து மீள்விக்கப்பட்டது