பக்கம்:பனித்துளி.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பனித்துளி

என்று சர்மாவுக்கு நினைவு வந்தது. அடுப்பங்கரையில் வேலையாக இருந்த சம்பகத்தைத் தேடிப் போனார் சர்மா. ‘ஏனம்மா! புடவைக்காரன் வந்திருந்தானே, நீ ஒன்றும் வாங்கிக் கொள்ளவில்லையா? அந்தப் பக்கம் வரவே இல்லையே நீ?’ என்று கேட்டார் சம்பகத்தை இரக்கமாகப் பார்த்து. -

‘எனக்கு இப்போது எதற்குப் புடவை? வேண்டியது இருக்கிறதே’ என்று பதில் கூறிய நாட்டுப் பெண்ணின் முகத்தைப் பார்த்ததும், “எனக்குப் பொன்னும், புடவையும் வேண்டியதுதானா? யாருக்காக நான் அவைகளை அணிந்து உலாவ வேண்டும்? கணவனால் ஒதுக்கப்பட்டவளுக்கு ஆடையும், அலங்காரமும் வேண்டுமா?’ என்று கேட்பது போல் இருந்தது அந்த முக பாவம்.

சர்மா நிலைப்படியைக் கையால் தாங்கிக் கொண்டு நின்றார். பிறகு மனத்தை அ.மு த் து ம் கஷ்டத்துடன் அங்கிருந்து ஹாலுக்குச் சென்று விட்டார்.

தகப்பனாருக்கும், மன்னிக்கும் நடந்த பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான் சங்கரன். வீட்டில் பண்டிகை அன்று எல்லோரும் புத்தாடை உடுத்திக் குதுரகலமாக வளைய வரும்போது, அவள் மட்டும் பழைய ஆடையுடன் நிற்கலாமா என்று தோன்றியது. அவனுக்கு. அன்று மாலையில் வெளியே சென்று திரும்பிய சங்கரன் கையில் ஒரு காகிதப் பொட்டலத்துடன் வந்தான்.

நேராக சமையற்கட்டுக்குப் போய் சம்பகத்தினிடம் பொட்டலத்தைக் .ெ கா டு த் த ன். சம்பகம் ஒன்றும் தெரியாமல் விழித்தாள்! “என்ன இது?’ என்று தடுமாறிக் கொண்டே கேட்டாள். பொட்டலத்துக்குள் கறுத்த பச்சையில் மஞ்சள் கோடு போட்ட நூல் புடவை ஒன்று இருந்தது. உங்களுக்காகத்தான் வாங்கி வந்தேன். நீங்கள் பண்டிகைக்காக ஒன்றுமே வாங்கிக் கொள்ளவில்லையே!” என்றான் சங்கரன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/128&oldid=682225" இலிருந்து மீள்விக்கப்பட்டது