பக்கம்:பனித்துளி.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி 127

‘விசுக் விசுக்கென்று பட்டுப் புடவை உராய ருக்மிணி அந்தப் பக்கம் வந்தாள். இரண்டு படி தவலை போல் முகத்தை ‘உப்பென்று வைத்துக் கொண்டு, ‘என்னடா! மன்னியோடு ரகசியம் பேசுகிறாய்? யாருக்குப் புடவை வாங்கி இருக்கிறாய், நீலாவுக்கா? அம்மாதான் நூற்றைம்பது ரூபாய் கொட்டி வாங்கி இருக்கிறாளே? நீ வேறு வாங்கினாயா என்ன?’ என்று சட்டசபையில் அடுக் கடுக்காக உ திரும் கேள்விகளைப் போல் கேட்டு அவனைத் திணற வைத்தாள்.

‘நீலாவுக்கு இல்லை, மன்னிக்குத்தான் வாங்கினேன்! அவள்தான் பட்டுப் புடவையே உடுத்துவது இல்லையே!” உப்பி இருந்த ருக்மிணியின் முகம் சப்பென்று வாடியது. ‘சம்பகத்துக்குச் சங்கரன் புடவை வாங்கிக் கொடுக்கவாவது வயசு வந்த மைத்துனன் மன்னிக்குப் புடவை வாங்கிக் கொடுக்க என்ன கரிசனம் அவனுக்கு? பூனை மாதிரி இருந்து கொண்டு இந்தச் சம்பகம் என்ன ஆட்டம் ஆட்டி வைக்கிறாள் மாமனாரையும், சங்கரனையும்! அவனானால் வீட்டை, வாசலை விட்டு விட்டு எங்கோ கண் காணாத சின்மயில் போய்க் கிடக்கிறான்! இந்தப் பீடை அவன் பங்கையும் சேர்த்துச் சாப்பிட்டு விட்டு நீலி வேஷம் போடுகிறாளே?’’ - -

பஞ்சுப் பொதியில் நெருப்பு பிடித்தது போல் புடவை விஷயம் வீடு பூராவும் ஒரு நொடியில் பரவியது. தலைக்குத் தலை நாட்டாண்மையா?” என்று கறுவிக் கொண்டு மீனாட்சி அம்மாள் ஆத்திரத்தோடு வந்தாள் புடவையைப் பார்க்க: “த்கு என்று சூள் கொட்டிவிட்டு, வழக்கத்தை விடச் சீக்கிரமாகவே நீலா தன் மாடி அறைக்குச் சென்று விட்டாள். - -

‘சங்கரா! நீ புத்திசாலி அப்பா. வீட்டிற்கு வாழ வந்த பெண்ணை மனம் நோக வைக்காமல் சுமாரான விலையிலாவது புடவை வாங்கி வந்தாயே?’ என்று சர்மா பிள்ளையிடம் கூறிச் சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/129&oldid=682226" இலிருந்து மீள்விக்கப்பட்டது