பக்கம்:பனித்துளி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 11

கட்டி வைத்துவிட்டு சகுனத்தைப் பார்த்து ஏதாவது வரன் வந்தால் முடித்துவிடும்” என்று சொல்லிக் கொண்டு ஜாதகத்தை ராமபத்திரய்யரிடமே திருப்பி நீட்டினார்.

== “கொஞ்சம் பார்த்துத்தான் சொல்லேன்?” என்று ராமபத்திரய்யர் கேட்கவும், “குரு பலன், யோக ஜாதகம் முதலிய எல்லா விஷயங்களையும் மீறி ப.க வ த் சங்கல்பத்தால் விவாகம் நடைபெறுகிறது. பகவானுடைய அருளினால் இந்த வருஷம் கட்டாயம் கல்யாணம் நடந்து விடும்” என்று தைரியம் கூறினார் மணி.

ராமபத்திரய்யர் கண்களில் உண்ர்ச்சிப் பெருக்கினால் நீர் நிறைந்தது. ஆமாம். ஜாதகமும், ஜோஸ்யமும் மனிதனாகவே மனத்தைக் குழப்பிக் கொள்ளும் விஷயங்கள் தாமே? இவைகளை மீறக் கூடிய சக்தி-அக்ஞை ஒன்று பகவத் அனுக்ரகம் என்று இருக்கிறதல்லவா? அது ஏற்பட வேண்டும். காமுவுக்கு என்று புருஷன் இனிமேலா பிறக்கப் போகிறான்?’ என்று மனத்துக்குள் எண்ணமிட்டவர், ‘அப்படியானால் தோஷ ஜாதகம்தான் பொருந்தும் என்று சொல்லு” என்று ஹீனஸ்வரத்தில் திரும்பவும் நப்பாசை விடாமல் மணியைப் பார்த்துக் கேட்டார்.

“ஆமாம். ஜாதகத்தைப் பொறுத்த வரையில் அங்காரக தோஷம் பரிபூரணமாக இருக்கிறது, சுத்த ஜாதகம் எதுவும் இதோடு பொருந்தாது” என்றார் மணி.

அப்படி அங்காரக தோஷமுள்ள ஜாதகம் ஏதாவது கிடைத்தாலும் வரதட்சிணை தோஷம் அதற்குக் குறுக்கே நின்றது. தவிர கலாசாலைப் படிப்போ, சங்கீதமோ, நடனமோ ஒன்றும் தெரியாத காமுவை ஏற்பதே ஒரு தோஷம் என்று சிலர் கருதினார்கள். காமு இப்படி இருபது வயசு வரையில் கல்யாணம் ஆகாமல் பெற்றவர்களுக்குக் கவலையை ஏற்படுத்தி வந்தாள்.

சோர்ந்த முகத்துடனும், கவலை நிரம்பிய உள்ளத் துடனும் ராமபத்திரய்யர் ஜோஸ்யர் மணியிடம் விடை பெற்றுக் கொண்டு பொன்மணிக்குக் கிளம்பினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/13&oldid=682227" இலிருந்து மீள்விக்கப்பட்டது