பக்கம்:பனித்துளி.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பனித்துளி

ஆனால், மாடி அறையில் புயல் அடிக்கப் போகிறது என்று அவருக்குத் தெரியுமா என்ன?

இரவு சாப்பாட்டுக்கு அப்புறம் அம்மா வாங்கி இருந்த புடவையுடன் மாடி அறைக்குச் சென்றான் சங்கரன். நீல விளக்கொளியில் பிரித்த ஆங்கிலப் புஸ்தகம் ஒன்றை மார்பின் மீது வைத்துக் கொண்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள் நீலா. விவாகமான ஒன்றரை வருஷங்களுக்கு அப்புறம், என்றுமில்லாத ஆசையுடன், காதலுடன் தன் மனைவியை நெருங்கி அவள் நெற்றியில் அன்பாகக் கை வைத்து அவளையே உற்றுப் பார்த்தான் சங்கரன். அவன் கரஸ்பரிசம் பட்டதும் நீலா விழித்துக் கொண்டாள். எரியும் நெருப்பிலிருந்து சிதறி விழுந்த இரண்டு நெருப்புத் துண்டுகளைப் போல் அவள் கண்கள் கதகத வென்று கோபத்தில் பிரகாசித்தன. அவன் கையை உதறிவிட்டுச் சடக்கென்று படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். ‘என்னை நீங்கள் ஒன்றும் தொட வேண்டாம்!” என வெடுக்கென்று கூறிவிட்டு, ஜன்னல் ஒரம் போய் நின்றாள் நீலா. o

‘ஏன் இந்த மாதிரி மகாராணி உத்தரவு போடு கிறாளோ?’ என்று நாடக பாணியில் கேட்டுச் சிரித்தான் சங்கரன். --

“நான் ராணியுமில்லை. நீங்கள் ராஜாவும் இல்லை நான் ஒரு ஏமாந்தவள். நீங்கள் ஏமாற்றியவர்!’ என்று அழுத்தமாகக் கூறிவிட்டு, மறுபடியும் தகிக்கும் பார்வையில் அவனைச் சுட்டெரித்துவிடுவது ப்ோல் பார்த்தாள்.

“என்ன சொல்கிறாய், நீலா? கொஞ்சம் புரியும்படி தான் பேசேன்! அம்மா உனக்குப் புடவை வாங்கி இருக்கிறாளே? அதைப் பார்க்கவே இல்லையே நீ?’ என்று சொல்லிப் புடவையை எடுத்து நீலா மேல் மடித்து வைத்து அழகு பார்த்தான் சங்கரன். தகதகவென்று பிரகாசிக்கும் ஜரிகைக் கரையுடன் அந்தப் புடவை நீலாவுக்கு எடுப்பாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/130&oldid=682228" இலிருந்து மீள்விக்கப்பட்டது