பக்கம்:பனித்துளி.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 பனித்துளி

கண்களில் அருவி போல் கண்ணிர் பெருகியது. தாயின் அன்பனைப்பில் சுகமாகத் தூங்கும் பானுவின் மெல்லிய மூச்சு வேதனை தரும் அவள் நெஞ்சில் பரவியது. இவ்வளவு துக்கத்துக்கும் நடுவில் கடவுள் ஒரு குழந்தையைக்கொடுத்து இருக்கிறார். அதை தன்னுடையது என்று உரிமை பாராட்டிக் கொள்ளலாம். பால் வடியும் அதன் முகத்தைப் பார்த்து மனச் சாந்தி பெறலாம். அதன் பேச்சில் ஈடுபட்டுக் கவலைகளை மறக்கலாம். கள்ளங் கபடமற்ற அதன் வார்த்தைகளைக் கேட்டுச் சந்தோஷிக்கலாம். குழந்தை மனம் குழந்தை உள்ளம் என்று சொல்லுகிறார்களே, அந்தக் குழந்தை மனத்தைப் புரிந்து கொள்ளும் சக்தி பலருக்கு இருப்பதில்லை. -

நிலாவும் கலாசாலைப் படிப்பு படித்தவள்தான் நான்கு தினங்களுக்கு முன்பு குழந்தை பானு ஏதோ விளையாட்டாக மாடியில் நீலாவின் அறைக்குள் சென்று விட்டாள். அங்கு இருந்த பொருள்கள் யாவும் அவளுக்கு வினோதமாக இருந்திருக்க வேண்டும். நீல வர்ணத்தில் இருந்த சோப்புப் பெட்டியை அவள் எடுத்து அழகு. பார்த்துக் கொண்டிருக்கும்போது நீலா வந்து விட்டாள்.

நீலா சித்தி என்றால் பானுவுக்கு மிகவும் பயம். கைகள் பதற பெட்டியைப் கீழே போட்டு விட்டாள் குழந்தை :பிளாஸ்டிக்’ பெட்டி தானே? சுக்கு சுக்காக உடைந்து போயிற்று. நீலாவுக்குக் கோபம் பற்றிக் கொண்டு வந்தது. குழந்தையின் கன்னத்தைத் திருகிக் கையைப் பிடித் து இழுத்துக் கொண்டு கீழே வந்தாள்.

பாருங்கள் மன்னி! உங்கள் பெண் செய்திருக்கிற வேலையை குழந்தைகளுக்குச் சிறு வயசிலிருந்தே நல்ல டிரெய்னிங் கொடுக்க வேண்டும்!” என்று படபடப்பாகப் பேசி விட்டுப் போனாள் நீலா.

“மாமா வீட்டிற்குப் போய்விட்டு வந்த பிறகு விஷமக் கொடுக்காக ஆகி இருக்கிறது!’ என்று பாட்டியும், அத்தை யும் வேறு ஸர்ட்டிபிகேட் கொடுத்தார்கள். *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/134&oldid=682232" இலிருந்து மீள்விக்கப்பட்டது