பக்கம்:பனித்துளி.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* *

t or

பணித்துளி 133

‘கிடக்கிறது விடு, நாலணா பெட்டிதானே? வீட்டில் ாத்தனையோ இரைபடுகிறது” என்று தாத்தா சிபாரிசுக்கு வராமல் இருந்தால் அவர்கள் இன்னும் ஏதாவது சொல்லி இருப்பார்கள். - -

கண்களில் கண்ணிர் தளும்ப ஒரு பக்கமாக நின்று கொண் டிருந்த குழந்தையை மறைவில் போய்ச் சம்பகம் அணைத்து கொண்டாள். இனிமேல் மாடிப் பக்கம் போகாதே, அம்மா!’ என்று கண்ணிர் வடித்தாள்.

முன்பு ஒரு நாள் வாசனைத் தைல புட்டியைக் கீழே போட்டு உடைத்து விட்டாள், நீலா. அதைப் பற்றி வீட்டில் எல்லோருக்கும் கோபமாக இருந்தாலும், ‘போகிறது போ. கை தவறிப் போய்விட்டது. பூமிதேவி ஆசைப்பட்டாள்!” என்றெல்லாம் மீனாட்சி அம்மாள் பேசினாள். ‘குழந்தை யைக் கண்டாலும்தான் இவர்களுக்கு ஆகவில்லை. என்னைக் கண்டாலும் பிடிக்கவில்லை’ என்று அதைக் கேட்டதும் சம்பகம் உருகினாள்.

தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கைகளை அன்புடன் வருடினாள் சம்பகம். தூக்கத்தில், தாயை ஆவலுடன் கட்டிக் கொண்ட பானுவின் ஸ்பரிசம், நொந்து போன சம்பகத்தின் மனத்துக்கு ஆறுதலாக இருந்தது. கண்களை அழுத்தி மூடிக் கொண்டாலும் அவளுக்குத் நூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டே இருந்தாள்.

கூடத்தில் மாட்டி இருந்த கடிகாரம் டாண், டாண் என்று இரண்டு அடித்தது. கோடை காலமாதலால் இறுக்கமாக இருக்கவே, பானுவுக்குப் போர்த்திவிட்டு விட்டு, சம்பகம் முற்றத்தில் வந்து உட்கார்ந்தாள். பகலெல்லாம் வேலை செய்து அலுத்துப் போய் இரவு தூக்கம் வராததால் தலையை வலித்தது அவளுக்கு. தலையை இரு கைகளாலும் தாங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்த அவள் எதிரில் சங்கரன் நின்றிருந்தான்.

Lu.-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/135&oldid=682233" இலிருந்து மீள்விக்கப்பட்டது