பக்கம்:பனித்துளி.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பளித்துளி 135

சம்பகத்தின் நெஞ்சம் காய்ந்து வரண்டது. நீலாவின் கால்களைப் பிடித்துக் கொண்டாகிலும், சற்று முன் நடந்த வைகளை மறந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டிக்

கொள்ளலாமா என்று அவள் மனம் ஆத்திரப்பட்டது.

10. சினிமாவில் நீலா!

வருஷப் பிறப்புக்கு முதல் நாள் கமலா காமுவின் ‘வீட்டிற்கு வந்தாள். அடுத்த நாள் பண்டிகைக்காக, அவள் அப்பா அப்பொழுதுதான் கடையிலிருந்து அனுப்பி இருந்த மளிகைச் சாமான்களை எடுத்துப் புடைத்துத் தகர டப்பாக் களில் நிரப்பிக் கொண்டிருந்தர்ள் காமு. ஒன்று துணி தைப்பது, இல்லாவிடில் புஸ்தகங்களைப் படிப்படி, அதுவும் இல்லாவிடில் வீட்டு வேலைகளைச் செய்வது என்று காமுவுக்கு அந்த வாழ்க்கையே அலுத்து விட்டது. சினிமாவுக்குப் போகிறேன்’ என்றால் அவள் அம்மா உடனே, “சினிமாவுக்கா? உனக்குத்துணை வருவதற்கு யார் இருக்கிறார்கள்? இருட்டு வேளையிலே வயசுப் பெண் சினிமாவுக்கும், டிராமாவுக்கும் போய் விட்டுத் தனியாக வரவாவது: அதெல்லாம் வேண்டாம், காமு!” என்று தடுத்து விடுவாள். m

அன்று கமலா வந்ததும் காமுவுக்குச் சற்றுத் தெம்பாக இருந்தது. சரசரவென்று டப்பாக்களை அலமாரியில் ஒழுங்காக அடுக்கி வைத்து விட்டு, அவளுடன் வாசல் அறையில் போய் உட்கார்ந்தாள். இதுவரையில் காமு பரபர வென்று செய்து வந்த வேலைகளைக் கவனித்த கம்லா ஆச்சரியம் நிறைந்த் மனத்துடன் அவளைப் பற்றியே எண்ணமிட்டாள். “இந்தக் காமுவுக்குத்தான் எவ்வளவு இறமை இருக்கிறது? துணிகள் தைத்தே மாதம் நாற்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/137&oldid=682235" இலிருந்து மீள்விக்கப்பட்டது