பக்கம்:பனித்துளி.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 பனித்துளி

பொன் மணி கிராமம், அவர்கள் வீடு, அதன் தோட்டம் கறவைப் பசு, சங்கரனின் பேச்சுக்கள், முத்தையாவின் கடிதம்...காமு சென்னைக்கு வந்து இப்போது டிரெயினிங்’ படிப்பது எல்லாம் அவள் மனத் திரையில் படங்களாக, ஒடின. ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் நேரும் சம்பவங் களையே ஒரு அழகான திரைப் படமாக எடுத்து விடலாமே? என்று எண்ணமிட்டாள் காமு.

இடைவேளையின் போது கமலாவே காமவடன் பேச்சுக் கொடுத்தாள்.

‘திடீர் திடீர் என்று நீ இப்படி மெளனத்தில் ஆழ்ந்து விடுகிறாயே காமு? படத்தைப் பார்க்கிறாயா, இல்லை ஏதாவது கற்பனையில் இறங்கி விடுகிறாயா என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறதே’ என்று கேட்டாள் கமலா.

‘கற்பனையும், காவியமும் எனக்கு உதயமாகுமா கமலா? என்னவோ நினைத்துக் கொண்டிருந்தேன்’ என்று காமு சற்று சலித்த மாதிரி பதில் கூறினாள்.

“ஆமாம், அன்று நீ எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது நீலா உன்னை அவள் வீட்டுக்கு வரும்படி கூப்பிட்டாளாமே நீ போகவில்லையா? அவள் அதைப் பற்றி என்னிடம் நிஷ்டுரமாகச் சொன்னாள்” என்று கூறினாள் கமலா.

போக வேண்டும், கமலா. ஆனால், அவ்வளவு பெரிய மனுஷர்கள் வீட்டுக்கு எப்படிப் போவது என்கிற தயக்கம் தான் காரணம். அப்பாவும் அவர் நண்பர் சர்மாவைப் பார்த்து வர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக் கிறார். நாளைக்குக் கடைக்குக் கூட விடுமுறை. போய் விட்டு வரலாம் என்று இருக்கிறோம்’ என்று கூறினாள்

கர்மு. - -

படம் முடிந்து, கூட்டத்தைக் கடந்து அவர்கள் வெளியே வருவதற்குள் நீலா தன்னுடைய காரில் ஏறிக்கொண்டு போய் விட்டாள். கமலாவும் காமுவை அவள் வீட்டு வாசல் வரைக்கும் துணையாக வந்து அனுப்பி விட்டுத் தன் வீட்டுக்குச் சென்றாள். --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/142&oldid=682241" இலிருந்து மீள்விக்கப்பட்டது