பக்கம்:பனித்துளி.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 பனித்துளி

வெற்றிலைத் தட்டைக் கொண்டுபோய் சுவாமி அலமாரியின் கீழ் வைத்துவிட்டு யோசித்தபடி நின்றாள்.

அன்று இரவு, ராமபத்திர அய்யர் வந்திருந்ததைப் பற்றி சர்மா சங்கரனிடம் கூறினார். மனுஷன் கொஞ்சம் கூட மாறவில்லை பார்த்தாயா? அதே பேச்சு. அதே வினயம். பாவம், வாழ்க்கை பூராவும் கஷ்டப்படுகிறான். பெண். படித்துவிட்டு வேலைக்குப் போகப் போகிறாளாம். நன்றாகக் கிளி மாதிரி இருக்கிறதடா, அந்தப் பெண் அதைத்தானே உனக்குக் கொடுக்கிறேன் என்று சொல்லிக் கொண்டதாக நீ கிராமத்திலிருந்து வந்ததும் முன்பு என்னிடம் கூறினாய்?’ என்று கேட்டார் சர்மா, பிள்ளை யைப் பார்த்து.

ராமபத்திர அய்யரா சங்கரனுக்குத் தன் பெண்ணைக் கொடுப்பதாகக் கூறினார்? ஒருகாலும் இல்லை. பணத்தின் குணத்தையும், பணக்காரர்களின் கு ண த் ைத யு. ம் அறியாதவரா அவர்? சங்கரனே அவரைப் பார்த்துப் பரிதாபப்பட்டுக் கூறிய வார்த்தை அது. காமுவின் செளந்தர்யம் அவனை அவ்விதம் பேச வைத்தது. உணர்ச்சிப் பெருக்கில் அவன், பின்னால் தன்னுடைய வார்த்தையைக் காப்பாற்றும் உறுதி தன்னிடம் இருக்கிறதா என்பதையும் யோசியாமல், பேசிய பேச்சு அது. ராமபத்திர அய்யர் தன் அந்தஸ்தை மீறி மகளுக்கு மணம் முடிக்க வேண்டும் என்று ஒருபோதும் கருதியவர் இல்லை. ராமபத்திர அய்யர் அந்தப் பேச்சை என்றோ மறந்து விட்டார். மறக்காமல் இருந்தால் சர்மாவின் வீடு தேடி வருவாரா? சங்கரனை வாய் குளிர அழைத்துப் பேசுவாரா? -

தலையைக் குனிந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான் சங்கரன். அவன் மனத்துள் பல எண்ணங்கள் தோன்றின.

பொன்மணி கிராமத்தின் ஏரியும், வயல்களும், பெருமாள் கோவிலும் அவன் கண் முன்னே தோன்றின்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/148&oldid=682247" இலிருந்து மீள்விக்கப்பட்டது