பக்கம்:பனித்துளி.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி - 149

ராமபத்திர அய்யர் அவன் வார்த்தைகளை உண்மையாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், காமுவோ அவன் வார்த்தைகளை எவ்வளவு தூரம் உண்மையென்று ாடுத்துக் கொண்டு விட்டாள்? அவனால் அவள் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறாள்.

இதை நினைத்துப் பார்க்கையில் சங்கரனின் மன்ம் வேதனை அடைந்தது. நமக்கு ஏற்ற சம்பந்தம் என்று அம்மா பண்ணி வைத்த கல்யாணத்தின் பலனை அவன் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.

மேலே சாப்பிடப் பிடிக்காமல் இலையை விட்டு எழுந்து சென்றான் சங்கரன்.

11. லோவின் மனக்கசப்பு

வருஷப் பிறப்பிற்கு அடுத்த நாள் மத்தியானம் சம்பகம் பகல் சிற்றுண்டியை எடுத்துக் கொண்டு, வாசல் அறையில் உட்கார்ந்திருக்கும் சர்மாவின் எதிரில் வைத்து விட்டுத் திரும்பினாள். உற்சாகம் இல்லாமல் களை இழந்து வாடிப்போய் இருக்கும் அவள் முகத்தைச் சிறிது நேரம் கவனித்து விட்டு சர்மா, “ஏனம்மா! நேற்று நீ மட்டும் ஏன் புதுப்புடவை உடுத்திக் கொள்ளவில்லை? உன் மனசிலே சந்தோஷம் இல்லை என்பது எனக்குத் தெரியும். உன் புருஷன் குணத்தோடு இருப்பான், உன்னை ஆசையுடன் வைத்துக் கொள்வான் என்று நம்பியே அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்தேன். வெளிநாடுகளுக்குப் போகிறவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைத்துவிட வேண்டும் என்று எல்லோரும் சொன்ன யோசனையை

ப.-10 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/151&oldid=682251" இலிருந்து மீள்விக்கப்பட்டது