பக்கம்:பனித்துளி.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பனித்துளி

ஏற்றுக் கொண்டுதான் அதன்படி செய்தேன். அவன் இப்படி இருப்பான்; ஒரு பெண்ணின் இதயம் வேதனையால் குமுறப் போகிறது என்றெல்லாம் என் அறிவுக்கு அப்பொழுது எட்ட வில்லை’ என்று அவளை நிற்க வைத்துப் பேசினார்.

சம்பகம் தலைகுனிந்து கொண்டே நின்றிருந்தாள். முத்துக்கள் போல் கண்ணிர் அவள் கண்களிலிருந்து பெருகிக் கீழே விழுந்தது. அன்பு உள்ளமும், பரந்த நோக்கமும் கொண்ட சர்மாவினால் அவள் அழுவதைப் பொறுக்க முடியவில்லை. அவர் கண்களிலும் நீர் நிறைந்து விட்டது அவர் அன்புடன், சமபகம்! இந்த வீட்டில் புகுந்த உனக்கு எந்தவிதமான குறையையும் நான் வைக்க மாட்டேன். நான் பணத்தாலும் காசாலும் எத்தனை செய்தும் என்ன அம்மா பிரயோசனம்? அவைகளினால் உன் மனசுக்கு ஏதாவது ஆறுதல் கிடைக்கப் போகிறதா?. ஐந்தாறு வருஷங்கள் பொறுமையுடன் இருந்து விட்டாய். இன்னும் சிறிதுகாலம் பொறுத்துப் பார்ப்போம்” என்றார். பிறகு எதையோ நினைத்துக் கொண்டவராக, ‘சங்கரன் வாங்கி வந்த புடவையை உடுத்திக் கொள் அம்மா. எனக்காகவாவது நீ சந்தோஷத்துடன் இருக்க வேண்டும்” என்று கூறிவிட்டு சிற்றுண்டியைச் சாப்பிட ஆரம்பித்தார். அங்கிருந்து உள்ளே வந்த சம்பகம் தன் அறைக்குள் சென்று சங்கரன் வாங்கி வந்த அந்த நூல் புடவையை எடுத்து மஞ்சள் தடவி உடுத்திக் கொண்டாள். அவள், சிவந்த மேனிக்கு அந்தப் புடவை எடுப்பாக இருந்தது. நேராக அவள் சர்மாவின் அறைக்குச் சென்று அவரை நமஸ்கரித்தாள். சர்மாவுக்கு அவளுடைய அடக்கமும் பணிவும் ஆனந்தத்தைக் கொடுத்தன.

பண்டிகை தினத்தை விட்டுத் திடீரென்று இன்று புதுப் புடவை சலசலக்க நடந்து வரும் . சம்பகத்தை ருக்மிணி அதிசயத்துடன் பார்த்தாள். அவள் தன் நெற்றியைச் சுள்த்துக் கொண்டு முகத்தில் ஆச்சரியம் ததும்ப இந்த அதிசயத்தைக் கண் கொட்டாமல் பார்த்தாள். அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/152&oldid=682252" இலிருந்து மீள்விக்கப்பட்டது