பக்கம்:பனித்துளி.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 பனித்துளி

அவளுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. அவர் எப்படி யெல்லாம் நடந்துகொள்வாரோ? எப்படியெல்லாம் மாறிப் போய் இருப்பாரோ? அவள்?...கடல் கடந்த அந்த நாட்டில் அவருக்குப் போட்டியாக முளைத்த அந்தப் பெண்ணும் அவருடன் வருவாளோ? வரட்டுமே. வந்தால் என்னுடன் இருந்துவிட்டுப் போகிறாள்” என்றெல்லாம் நினைத்துக் கொண்டு சம்பகம் மெய்ம்மறந்த நிலையில் இருந்த போது கூடத்தில் பலமான பேச்சுக் குரல் கேட்டது.

கடடத்தில் இருந்த ஒரு விசாலமான அறையில் மீனாட்சி அம்மாள் இரும்புப் பெட்டியைத் திறந்து வைத்துக் கொண் டு நகைகளையும், புடவைகளையும் ஒழுங்குபடுத்தி வைத்துக் கொண்டிருந்தாள். சம்பகம் சமையலறைக்குள் சென்றதும் ருக்மிணி பரபரவென்று அங்கே வந்தாள். வந்தவள் உரத்த குரலில், “இந்த வீட்டிலே நடக்கிற

அதிசயங்கள் ஒன்றா இரண்டா? உனக்கும், எனக்கும் இல்லாத கரிசனம் அப்பாவுக்குத் தன் மூத்த நாட்டுப் பெண்ணிடத்தில் பொங்கி வழிகிறது போ!’ என்று

அலட்சியத்துடன் கூறி, கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு நின்றாள்.

மீனாட்சி அம்மாளுக்கு அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதே புரியவில்லை.

நேற்று பூராவும் புதுப் புடவையை உடுத்திக் கொள்ளாதவள் இன்று பு து ைச க் கட்டிக்கொண்டு மாமனாருக்கு நமஸ்காரமும் பண்ணி விட்டு வருகிறாள்! நேற்று நாமெல்லாம் கட்டிக் கொண்டபோதே இவளும் புடவையைக் கட்டிக் கொள்வது தா னே? ஆனாலும், இப்படி ஒரு வயிற்றெரிச்சலும், பொறாமையும் வே ண் டா ம’ என்றாள் ருக்மிணி.

பெண்ணுக்கு தாயார் பதில் கூறுவதற்குள் சர்மா அந்த அறையின் வாசற்படி அருகில் வந்து நின்றார். பிறகு சற்றுக் கண்டிப்பான குரலில், “என்ன இது, ருக்மிணி வீடே அதிர்ந்து போகிற மாதிரி இந்த விஷயத்தைப் பிரமாதப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/154&oldid=682254" இலிருந்து மீள்விக்கப்பட்டது