பக்கம்:பனித்துளி.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி. 153

படுத்துகிறாய்? பிரமாதப்படுத்த வேண்டிய விஷயங்களை மென்று விழுங்கி மறைத்து விடுகிறீர்கள். ஒன்றும் . இல்லாததைப் பெரிதாக்கிப் பேசுவதே உங்களுக்கு வழக்க மாகிவிட்டது. நான்தான் சம்பகத்தைப் புதுப் புடவையைக் கட்டிக் கொள்ளச் சொன்னேன்!” என்று கூறிவிட்டு, அங்கிருந்து வெளியே போய்விட்டார்.

வீட்டை விட்டு சர்மா வெளியில் சென்று விட்டார் என்று தெரிந்ததும் ருக்மிணியின் ஆத்திரம் அளவு கடந்து போயிற்று. கோபத்தால் முகம் சிவக்க அவள், உனக்கும் தான் வயசாகிறது அம்மா. எங்களுக்கெல்லாம் புடவை வாங்கும்போதே மன்னிக்கும் வாங்கி விட்டுப் போகிறது தானே? அவளுக்காக சங்கரன் .'ஸ்பெஷ'லாக வாங்கிவர வேண்டுமா என்ன? நமக்கெல்லாம் இல்லாத அக்கறை இவனுக்கு என்னவாம்? துர! கொஞ்சங்கூட இதெல்லாம் . நன்றாகவே இல்லை நாலு பேர் காதில் விழுந்தால் நம்மைப் பார்த்துத்தான் சிரிப்பார்கள்’’ என்றாள்.

சமையலறையில் நின்றிருந்த சம்பகத்தின் உடம்பில் அந்தப் புடவை முட்களாகக் குத்துவதைப் போன்ற உணர்ச்சியை உண்டாக்கியது. வெறுப்புடன் அவள் தன்னையே ஒருமுறை பார்த்துக் கொண்டாள். மனத்தில் எழும் வெறுப்பையும், துக்கத்தையும் எப்படியாவது அடக்கிச் சகித்துக் கொள்ள வேண்டும் என்று அவள் முயன்று கொண்டிருந்த போது, மீனாட்சி அ மாள் கணிரென்ற குரலில் பேசினாள். si

‘இதெல்லாம் உன் அப்பா கொடுக்கிற இடம். சங்கரன் தான் புடவை வாங்கி வந்தான் என்றால் அதை இவள் ஏன் எடுத்து உடுத்திக் கொள்ள வேண்டுமாம்?’’

‘அதற்குத்தான் சொல் கிறேன்! நம் வீட்டை பார்த்து நாலு பேர் சிரிக்கப் போகிறார்கள், பாரேன்! இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ?’ என்றாள் ருக்மிணி ஏளனம் தொனிக்கும் குரலில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/155&oldid=682255" இலிருந்து மீள்விக்கப்பட்டது