பக்கம்:பனித்துளி.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பனித்துளி

இதுவரையில் மாடியில் இருந்தபடி கீழே நடக்கும் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருந்த நீலா, வேகமாக மாடிப்படிகளில் இறங்கி வந்தாள். வந்தவள் தைரியமாகத் தன் நாத்தியின் எதிரில் போய் நின்று, ‘இதெல்லாம் ஒரு அதிசயமா என்ன இந்த வீட்டில்? நான் தனியாகச் சினிமா விற்குப் போகிறதும், கண்காட்சிக்குப் போகிறதும் தான் உங்களுக்கெல்லாம் அதிசயமாக இருந்தது! அதை விடப் பெரிய அதிசயங்களை நான் கவனித்து வருகிறேனே! நிலாவிலே உட்கார்ந்து மைத்துனனிடம் ரகசியம் பேசுவதும், கட்டிய மனைவி இருக்கும் போது மன்னியைத் தேடிப் போய் தண்ணிர் கேட்டு வாங்கிச் சாப்பிட்டு வருவதும் பெரிய அதிசயங்கள் தானே? படித்தவள் நான், ப்ளெயி”னாக இருந்தால் உங்களுக்குப் பிடிக்கவில்லை!” என்றாள்.

சமையலறையில் நின்றிருந்த சம்பகத்தின் உள்ளத்திலே இந்தச் சொல்லம்புகள் சுருக்கென்று தைத்தன. அவள் செயல் இழந்து நின்ற சமயம், அப்பொழுதுதான் பள்ளிக் கூடத்திலிருந்து வந்த பானு, கண்ணிர் வழியும் தாயின் முகத்தைப் பார்த்துப் பிரமை பிடித்தவள் போல் அருகில் வந்து நின்றாள்.

‘அம்மா! அம்மா!’ என்று பல முறைகள் கூப்பிட்டுத் தன் சின்னஞ்சிறு கைகளால் தாயின் கைகளைப் பிடித்து உலுக்கினாள் பானு, சம்பகம் தன் சுய நினைவை அடைந்தவள் போல் திடுக்கிட்டாள். அடுத்து சரசரவென்று காரியங்கள் நடைபெற்றன. தன் பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் அந்தப் புடவை அவள் கண்களுக்கு விஷசர்ப்பம் போல் காட்சி அளித்தது.

‘துர சனியன்!” என்று சொல்லிக் கொண்டே அதைத் துார எறிந்து விட்டு, எப்பொழுதும்போல அவளுடைய பழைய புடவையை எடுத்து உடுத்திக்கொண்டாள் சம்பகம், அப்புறமும் அவளுக்கு அந்த வீட்டில் இருக்க மனம் ஒப்ப வில்லை. கையில் கிடைத்த இரண்டு புடவைகளை எடுத்து ஒரு பையில் திணித்துக் கொண்டு, தன்னுடைய ஒரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/156&oldid=682256" இலிருந்து மீள்விக்கப்பட்டது