பக்கம்:பனித்துளி.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி 155

ஆதாரமாண் பானுவைக் கையைப் பிடித்து அழைத்தவாறு சம்பகம் வாசல் கேட்டை நோக்கிச் சென்றாள்.

“எங்கே போகிறோம், யாருடைய ஆதரவை நாடிப் போகிறோம்? யார் ஆதரவுடனும், அன்புடனும் தன்னைப் பராமரிக்கப் போகிறார்கள்?’’ என்றெல்லாம் அவள் யோசிக்கவே இல்லை.

சம்பகம் கேட்"டைத் தாண்டுவதற்குள் சங்கரன் காரியாலயத் திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தவன் அவள் எதிரில் வந்தான். அளவுக்கு மீறிய துக்கத்தினால் பெருகும் கண்ணிருடன் கேட் அருகில் நிற்கும் சம்பகத்தைப் பார்த்ததும் அவனுக்குத் துாக்கிவாரிப் போட்டது.

சித்தப்பா!’ என்று ஆசையுடன் அழைத்தவாறு பானு ஒடிப்போய் அவனைச் சேர்த்துக் கட்டிக் கொண்டாள்.

‘எ எனம்மா, கண்ணு! மன்னி! நீங்கள் எங்கே போகிறீர்கள்? இதெல்லாம் என்ன, மன்னி?” என்று கேட்டான் அவன்.

சம்பகம் மெளனமாகவே நின்றாள். இதற்குள் சம்பகத்தைக் காணோமே என்று தேடிக்கொண்டு வந்த சமையல்கார மாமி அங்கு வந்து சேர்ந்தாள்.

  • சம்பகம! இதெல்லாம் என்ன அம்மா? உன் கஷ்டங் களுக்கு விடிவு ஏற்பட்டு விட்டது என்று சற்று முன் நான் சொல்ல வில்லையா? அளவுக்கு மீறிய சோதனைக்கு நீ ஆளாகி விட்டாய். இனிமேல் இந்த மாதிரி அபவாதத்தைக் கேட்ட பிறகு-உனக்கு வேறு கஷ்டம் ை ன்றும் வராது. உள்ளே வா. இந்த வீட்டில் உன்னிடம் அக்கறை காட்டும் உன் மாமனாரை மறந்து அவர் உத்தரவு இல்லாமல் நீ எங்கேயும் போகக்கூடாது. வா. அம்மா!’ என்று அவள் கைகளைப் பற்றி உள்ளே அழைத்துப் போனாள்.

சங்கரன் காரியாலயத்திலிருந்து வீட்டுக்கு வரும் முன் அன்று தன் மாமனார் வீட்டுக்குப் போயிருந்தான். அவனுக்கு அங்கு வரவேற்பும், உபசாரங்களும் )rr*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/157&oldid=682257" இலிருந்து மீள்விக்கப்பட்டது