பக்கம்:பனித்துளி.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடைபெற்றன. டாக்டர் மகாதேவன் அவன் காரியாலய ச ம் ட ந் த மா ன பல விஷயங்களைப்பற்றி அவனை விசாரித்தார். நீலாவுடன் அவன் தங்கள் வீட்டிலேயே வந்து இருந்து விடலாம் என்றெல்லாம் கூறினார். அவருடைய இந்தப் ய்ேச்சுக்களும், உபசாரங்களும் அவனுடைய மனத்தில் எந்தவிதமான உணர்ச்சியையும் ஏற்படுத்த வில்லை. அவன் கிளம்புவதற்கு முன்பு அவர் கூறிய விஷயம் அவனைத் திடுக்கிட வைத்து விட்டது.

‘குழந்தைக்கு வளைகாப்பு செய்ய வேண்டுமாம். அதோடு அவள் உடம்பும் கொஞ்சம் பலவீனமாக இருப்ப தாகத் தெரிகிறது. நல்ல நாள் பார்த்து அழைத்து வர வேண்டும் என்று அவள் தாயார் சொல்லிக் கொண்டிருக் கிறாள்’ என்று டாக்டர் ம க | .ே த வ ன் தன் மாப்பிள்ளையிடம் கூறினார்.

“இன்னும் இரண்டு நாட்களுக்கு அப்புறம் நல்ல நாள் பார்த்திருக்கிறது. வந்து அவளை அழைத்து வருகிறோம். உங்கள் தாயாரிடம் சொல்லி விடுங்கள்’’ என்று நீலாவின் அம்மா மாப்பிள்ளையிடம் சொன்னாள்.

‘'நீலாவுக்கும், தனக்கும் எவ்வளவுதான் மனக் கசப்பு இருந்தாலும், இனிமேல் அவைகளைக் குறைத்துக் கொண்டு தான் ஆகவேண்டும். தாம்பத்ய உறவு பலமாக அமையவே இம்மாதிரி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது போலும்” என்றெல்லாம் சங்கரன் நினைத்துக் கொண்டான்.

வீட்டுக்கு வந்ததும் நீலாவைத் தனிமையில் சந்தித்துத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்ள வேண்டும் என்கிற தீர்மானத்துடன் வந்தான். ஆனால், அதற்கு நேர்மாறாக விஷயங்கள் வீட்டில் நடைபெற்றன.

எப்பொழுதும் துக்கத்தைக் கண்ணிராக வடிக்கும் மன்னி சம்பகம் அன்று வீட்டை விட்டு எங்காவது போய்த் தன் துயரத்துக்கு ஒரு முடிவு தேடிக் கொள்ளலாம் என்று கிளம்பி வாசல் வரைக்கும் வந்து விட்டாள். அவன் சிறிது தாமதித்து வ ந் தி ரு ந் தால் அந்த வீட்டில் அன்று என்னென்ன விபரீதங்கள் எல்லாம் நேர்ந்திருக்குமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/158&oldid=682258" இலிருந்து மீள்விக்கப்பட்டது