பக்கம்:பனித்துளி.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 157

சம்பகம் ஏன் வீட்டை விட்டுக் கிளம்ப வேண்டும்? அப்படி வீட்டில் என்னதான் நடந்து விட்டது என்று சங்கரன் தீவிரமாக யோசித்துப் பார்த்தான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் கூடத்தில் சென்று உட்கார்ந்தவுடன் வழக்கம் போல் சமையற்கார அம்மாள் சிற்றுண்டியும், காபியும் கொண்டு வந்து வைத்து விட்டுப் போனாள்.

ஒரு வேலையும் இல்லாமலேயே வீட்டைச் சுற்றிவரும் ருக்மிணியைக் காணவில்லை. மீனாட்சி அம்மாளின் பேச்சுக் குரல் வழக்கத்துக்கு விரோதமாக மிகவும் சாந்தமாகச் சமையலறையிலிருந்து கேட்டது. ங்

சம்பகம் சுவாமி விளக்கை ஏற்றிவிட்டு ஏதோ ஒரு புஸ்தகத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். யாரிடமிருந்து வீட்டில் அன்று நடந்த தகவல்களை அறியலாம் என்பதே சங்கரனுக்குத் தெரியவில்லை. கூடத்தில் கவலையுடன் உட்கார்ந்திருக்கும் சித்தப்பாவிைப் பார்த்து பானு அங்கு வந்தாள். ஆசையுடன் அவன் அருகில் வந்து நின்று, “சித்தப்பா! நானும், அம்மாவும் திரும்பவும் மாமா வீட்டுக்குத்தான் போக வேண்டுமாமே? அம்மா சொல்கிறாள்’ என்றாள்.

‘ஏனம்மா அப்ப்டி?’ என்று கேட்டான் சங்கரன் அந்தப் பிஞ்சு உள்ளத்தில் நிகழும் போராட்டங்கள் எத்தனையோ என்று சங்கரனின் மனம் வருந்தியது.

“ ‘இனிமேல் இந்த வீட்டில் எனக்கு எந்தவிதமான கெளரவமும் இருக்காது. போய் விடலாம் பானு’ என்று அம்மா தான் சொல்கிறாள் சித்தப்பா!’ என்றாள் குழந்தை.

கெளரவம், அவமரியாதை, மானம், அவமானம் என்கிற வார்த்தைகளுக்கெல்லாம் அந்தக் குழந்தைக்கு அர்த்தம் தெரிந்திருக்காது. இருந்தாலும், தன் தாயை அவர்கள் கொடுமைப் படுத்துகிறார்கள், அவள் துக்கம் தாங்காமல் கண் ணிர் வடிக்கிறாள் என்பது மட்டும் பானுவுக்குப் புரிந்து தான் இருந்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/159&oldid=682259" இலிருந்து மீள்விக்கப்பட்டது