பக்கம்:பனித்துளி.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 பனித்துளி

டாக்டர் எழுதிக் கொடுத்திருந்த “இஞ்சக்ஷன்’ மருந்தை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்த ராமபத்திர அய்யரின் முகம் வாடிப் போய் இருந்தது. கூடத்தில் ஒரு பக்கம் சுருட்டிப் படுத்துக் கொண்டிருந்த மனைவி உயிருக்கு மன்றாடுகிறாள். டாக்டர் இருபத்தி ஐந்து ரூபாய்க்குக் குறையாமல் மருந்து எழுதிக் கொடுத்து விட்டுப் போய் விட்டார். வயதானவர்களுக்கும், பல ஹீனமானவர் களுக்கும் நிமோனியா ஜூரம் வந்தால் கவனித்து வைத்தியம் செய்ய வேண்டும், கட்டாயம் மருந்தை வாங்கி வையுங்கள்’ என்று வேறு கண்டிப்பாகச் சொல்லி விட்டுப் போயிருந்தார். மாதக் கடைசி. காலண்டரில் தேதியைப் பார்த்துக்கொண்டே காலம் கழிக்கும் பகுதி மாதம் இருபது தேதியிலிருந்து முப்பது தேதி வரைக்கும் தான் . மத்தியதர வகுப்பினர் இந்த அவதியை நன்கு உணர்ந்திருப்பார்கள். கையில் பத்து ரூபாயை வைத்துக் கொண்டு மனைவிக்கு வைத்தியம் பார்ப்பதா? வீட்டுச் செலவைக் கவனிப்பதா? அதிலும் எட்டு ரூபாய் சில்லறைக்கு இஞ்சக்ஷன் மருந்து வாங்கியாயிற்று.

மருந்துப் புட்டியைக் கையில் வாங்கிக் கொண்ட காமு தகப்பனாரைப் பார்த்து, ‘இன்னொரு மருந்து தான் முக்கியமானது அப்பா! அதை வாங்கி வரவில்லையே நீங்கள்?’ என்று கேட்டாள். h

“எங்கேயிருந்து வாங்குகிறது. அம்மா? பத்து ரூபாயில் மீதி ஒன்றரை ரூபாய் இருக்கிறது. இன்னும் ஏழெட்டு தினங்கள் இருக்கின்றனவே முதல் தேதிக்கு? கடையில் சாமான் வாங்குகிறவர்கள் முதல் தேதிக்குத் தானே பணம் கொடுப்பார்கள்? அதுவும் மாசக் கடைசியில் யார் அதிகமாகச் சாமான்கள் வாங்குகிறார்கள்?’ என்று கேட்டார் அவர்.

எப்படியும் மருந்து வாங்கி வைத்தாக வேண்டும். இல்லாவிட்டால் டாக்டர் கோபித்துக் கொள்வார். ஏற்கெனவே வியாதி முயற்றிய பிறகு அவரை அழைத்த தற்காகக் காமுவைக் கோபித்துக் கொண்டார் அவர்.

i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/164&oldid=682265" இலிருந்து மீள்விக்கப்பட்டது