பக்கம்:பனித்துளி.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 . - பனித்துளி

அவள் கண்கள் முன்னைக் காட்டிலும் பிரகாசமாக இருந்தன. எப்பொழுதும் பெருமூச்சு விட்டுக் கொண் டிருத்தவள் நிதானமாகமூச்சுவிட ஆசம்பித்தாள்.காலையில் டாக்டர் கொடுத்து விட்டுப் போன பெனிஸிலின் ஊசியின் விளைவால் அம்மாவுக்குக் குணம் ஏற்பட்டிருக்கிறது என்று காமு சந்தோஷப்பட்டாள். கட்டாயம் கமலாவிடம் சென்று பணம் பெற்று வந்து இன்னொரு மருந்தையும் வாங்கி வந்துவிட வேண்டும் என்கிற உறுதியுடன் காமு, தகப்பனாரை அழைத்து அம்மாவின் பக்கத்தில் உட்கார வைத்து விட்டுக் கிளம்பினாள். ஆனால் மறுபடியும் விசாலாட்சி காமுவைக் கூப்பிட்டுத் தன்னை விட்டு விட்டுப் போக வேண்டாம் என்று பிடிவாதம் பிடித்தாள்.

‘போய் விட்டு வரட்டும் விசாலம். டாக்டர் உனக்காக இரண்டு மருந்துகள் வாங்கி வைக்கச் சொல்லியிருக்கிறார்! அவள் போய் வாங்கி வரட்டும்! வெறுமனே நாள் பூராவும் உன் பக்கத்திலேயே இருந்தால் அவளுக்கும் அலுப்பு ஏற்படாதா? என்று ராமபத்திர அய்யர் கூறிய பிறகு விசாலாட்சி தன் கண்களில் நீர் பெருக முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு படுத்து விட்டாள்.

“விசாலம், ஏன் அழுகிறாள்? குழந்தை காமு கஷ்டப் படுகிறாளே என்று அழுகிறாளா, வியா தி இப்படிப் பலமாக வந்துவிட்டதே என்று அழுகிறாளா?’ என்று ராமபத்திர அய்யர் இவ்விதம் எண்ணமிட்டுக் கொண்டே விசாலத்தின் படுக்கையில் அவளுக்கு வெகு அருகாமையில் போய் உட்கார்ந்தார். அன்புடன் அவள் முகத்தைத் திருப்பி அவள் தலையை வருடினர் அவர். விசாலாட்சி அவர் மடியில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு வெகுநேரம் அழுதாள். ராமபத்திர அய்யரின் கண்களிலும் நீர் பெருகி வழிந்தது. பிறகு சிறிது மனத்தைத் தேற்றிக் கொண்டு, ‘என்ன இது விசாலம், உடம்பை இப்படி அலட்டிக் கொள்கிறாயே! ஏன் இப்படி அழுகிறாய்?’ என்று வாத்சல்யத்துடன் கேட்டார்

9/6.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/166&oldid=682267" இலிருந்து மீள்விக்கப்பட்டது