பக்கம்:பனித்துளி.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளில் A. - 1.65

விசாலாட்சி அவரையே உற்றுப் பார்த்தாள். “இன்றைக்கு என்னவோ எனக்குப் பயமாக இருக்கிறது. காமுவை ஏன் என்னை விட்டுப் பிரித்து வெளியே அனுப்பி விட்டீர்கள்? இன்றைக்கு ஒரு நாள்தானே நானும், அவளும் சேர்ந்து இருக்கப் போகிறோம்?’ என்று சம்பந்த மில்லாமல் பேசினாள்.

ராமபத்திர அய்யர் அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தார். ஜூரம் ரொம்பவும் குறைந்து இருந்தது. நெற்றி யில் முத்து முத்தாக வியர்வை அரும்பி இருந்தது. பக்கத்தில் கிடந்த துண்டினால் அவள் முகத்தைத் துடைத்து விட்டார் அவர்.

‘உனக்கு மருந்து வாங்கத்தான் அவள் வெளியே போய் இருக்கிறாள் விசாலம். இன்னும் அரை மணியில் வந்து விடுவாள். கண்டமாதிரி பேசாதே!” என்று கூறி விட்டுப் பாலைச் சுட வைத்து எடுத்து வரச் சமையலறைக்குள் சென்றார் ராமபத்திர அய்யர். அவர் பாலை எடுத்துக் கொண்டு வெளியே வந்த போது விசாலாட்சி கண்களைப் பரக்க விழித்துப் பெருமூச்சு விட்டாள். அடிக்கடி காமு காமு’ என்று பிதற்றவும் ஆரம்பித்தாள்.

காமுவை ஏன் அனுப்பினோம் என்று ஆகிவிட்டது ராமபத்திர அய்யருக்கு. பரபரப்புடன் வாசலுக்கும் உள்ளுக்குமாக அ ைல ந் து விசாலத்தைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.

காமு கமலாவின் வீட்டிற்குச் சென்று அவளிடம் பிணத்தைப் பெற்றுக் கொண்டு கடைத்தெருவுக்குப் போய் மருந்து வாங்கிக் கொண்டு கையுடன் டாக்டரையும் அழைத்து வந்தபோது, விசாலாட்சியின் நிலைமை கவல்ைக் பெ_மாகி விட்டது. உள்ளே வந்ததும், ‘வந்துவிட்டாயா அம்மா? உன் அம்மாவைப் பாரேன், என்னமோ போல் இருக்கிறாளே!” என்று கூறி முகத்தை மூடிக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதார் ராமபத்திர அய்யர்.

டாக்டர், விசாலாட்சியின் கை நாடியைப் பரிசோதித்துக்

கொண்டிருக்கும் போது, காமு அவளை ஆதரவுடன்

.-11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/167&oldid=682268" இலிருந்து மீள்விக்கப்பட்டது