பக்கம்:பனித்துளி.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 “பனித்து வி

அனைத்துக் கொண்டு, ‘அம்மா! நான் வந்து விட்டேனே, என்னைப் பார் அம்மா!’ என்று முடிக்கும் முன் பு விசாலாட்சி போய் விட்டாள். காமுவுக்குக் கல்யாணமாகவில்லையே: காமு அழகான புடவைகளையும் நகைகளையும் அணிந்து கொள்ள வில்லையே” என்கிற தீராக் குறையுடன் விசாலாட்சி போய் விட்டாள். காமுவின் க ண் க ள் கண்ணிரைப் பெருக்கவில்லை. கல்லாகச் சமைந்து, தாயின் உடலுக்கு அருகில் வருவார் போவோரையும் லட்சியம் பண்ணாமல் உட்கார்ந்திருந்தாள் காமு.

‘காமுவுக்குக் கல்யாணம் பண்ணியிருந்தேனானால் விசாலம் இவ்வளவு சீக்கிரம் போய் இருக்க மாட்டாள்’ என்று வருபவர்களிடம் கூறி அங்கலாய்த்துக் கொண்டார் ராமபத்திர அய்யர்.

உலகத்திலே மனிதனால் தடுக்க முடியாத நிகழ்ச்சிகள் அநேகம் நடைபெறுகின்றன. காமுவுக்கு மூன்று வருஷங் களுக்கு முன்பே ராமபத்திர அய்யர் வரன்கள் பார்த்து வந்தார். மாதம் ஐம்பது ரூபாய் சம்பாதிக்கும் பிள்ளையாக இருந்தாலும் போதும் எ ன் று தேடினார். பிள்ளை சம்பாதிப்பது ஐம்பது ரூபாயாக இருந்தாலும் அவனைச் சார்ந்தவர்கள் ஆயிரம் ரூபாய்க்குமேல் வர தட்சினை கேட்டார்கள் பிறகு முத்தையா காமுவை மூன்றாந்தார மாக மணக்க முன் வந்தார். அதிலும் மனைவிக்கும் அவருக்கும் அபிப்பிராய பேதம் எழுந்தது. எதிர்பாராத விதமாக சங்கரன் இவர்கள் குடும்பத்தில் தலைபிட்டான். ஏழைப் பெண்களைப் பணக்காரப் பிள்ளைகள்தான் கல்யாணம் செய்து கொண்டு, சமூகத்துக்கு வழி காட்ட வேண்டும் என்று பேசி, அதைச் சடுதியில் மறந்தும் போனான்.

காமுவால் அவனை மறக்க முடியவில்லை. கிராமத்தில் ஏச்சையும் பேச்சையும் பொறுக்க முடியாமல் உரிமையுடன் வாழ்ந்து வந்த வீட்டையும், மாடு கன்றையும் விற்று விட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/168&oldid=682269" இலிருந்து மீள்விக்கப்பட்டது