பக்கம்:பனித்துளி.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 167

பட்டினத்துக்கு வந்து சேர்ந்தார் ராமபத்திர அய்யர். காமு கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்கிற நினைவையே ஒழித்து விட்டு, வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்துத் தாயின் மனக் கஷ்டத்தைக் கூடப் பாராட்டாமல் இருந்து விட்டாள். விசாலாட்சி இதை நினைத்தே ஏங்கினாள், உருகினாள். அவள் மனக்கஷ்டத்துக்கும் ஒரு முடிவு ஏற்பட்டு விட்டது. கவலையும், கஷ்டமும் தெரியாத உலகத்தை நாடிச் சென்று விட்டாள் அவன். இவ்வளவு காலம் கவலை தேங்கியிருந்த அவள் முகம் அன்று நின்களங்கமாக இருந்தது.

எந்தக் குடும்பத்தை விசாலாட்சி மனதார வெறுத்து வந்தாளோ, எவனால் அவள் பெண்ணின் வாழ்வு தடைப் பட்டுக் கிடக்கிறது என்று நினைத்தாளோ அந்தக் குடும்பத் தினர், அவள் இறந்து போனதற்காக காமுவின் வீட்டிற்கு வந்தனர். சங்கரன் பத்து ரூபாய் நோட்டுகளாக இருபது நோட்டுகளை எடுத்து வந்து, ராமபத்திர அய்யர் தனியாக இருக்கும் சமயம் பார்த்து, மாமா செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள். முன்பின் தெரியாத இடத்தில் என்ன செய்வீர்கள்?’ என்று வருத்தத்துடன் கூறி, கொடுத்துப் போனான்.

‘அம்மா, குழந்தை! வெறுமனே அம்மாவை நினைத்து வருகி, படாதே! அப்பாவை நீதான் பார்த்துக் கொள்ள ாழாடும்” என்று சர்மா காமுவைத் தேற்றினார்.

_அவள் போனதற்காக நான் வருத்தப்பட வில்லை அப்பா, காமுவுக்குக் கல்யாணம் ஆகவில்லை என்கிற குறையோடு போய் விட்டாளே என்று தான் கஷ்டமாக பருகிறது’ என்று கூறி ராமபத்திர அய்யர் மளமள வென்று கண்ணிர் பெருக்கினார். r;

ாஸ்லோரும் அவரவர் வீட்டிற்குப் போய் விட்டார்கள். _ வெறி சென்று கிடந்தது. கடத்து மூலை பாழாகி ---, |ெ | க்ெ ாரு .rth காமு’ காமு’ என்று _ loss ஸ் மறைந்து விட்டது. ‘உன் சிவப்பு உடம்புக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/169&oldid=682270" இலிருந்து மீள்விக்கப்பட்டது