பக்கம்:பனித்துளி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி 15

வெளியில் செல்லாமலும் ஒருவிதக் கவலையுடன் இருந்து வருவது அவருக்குத் தெரியும்.

- ஊஞ்சலை விட்டு எ ழு ந் த a t கோபத்துடன் சமையலறைப் பக்கம் சென்று, “ஆமாம், வர வர உன் தொந்தரவு பெரிசாக இருக்கிறதே! பேசாமல் இருக்க மாட்டாயா நீ? குழந்தையை சதா ஏதாவது துணப்பிக் கொண்டே இருக்கிறாயே?’ என்று மனைவியைப் பார்த்து இரைந்து விட்டுக் கொல்லைப் பக்கம் சென்றார். கிணற்றி லிருந்து இரண்டு வாளி தண்ணிர் இறைத்து முகம், கை கால்களைச் சுத்தம் செய்து கொண்டு, மாட்டுக் கொட்டிலில் அவரையே பார்த்துக்கொண்டு நிற்கும் செவிலிப் பசுவுக்குப் புல்லை எடுத்துப் போட்டார்.

அப்ப்ோது காமு கூடத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்து வரவிருக்கும் விருந்தாளியை வரவேற்கத் தயார் செய்து கொண்டு இருந்தாள். அவள் பெருக்கி முடித்த சமயம் வாசற் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. ஒடிப்போய் கதவைத் திறந்தாள் காமு. சங்கரன் அவளைப் பார்த்து, அப்பா வந்து விட்டாரா?’ என்று கேட்டுக் கொண்டே நுழைந்தான்.

‘வந்து விட்டார். உட்காருங்கள்!’ என்று கூறிவிட்டு, அப்பாவைக் கூப்பிட காமு கொல்லைப் பக்கம் சென்றாள். சிறிது நேரத்துக் கெல்லாம் ராமபத்திரய்யரும், சங்கரனும் நெடு நாள் பழகியவர்கள் போல் பேச ஆரம்பித் தார்கள். இந்த ஊருக்கு வந்தும் நீ நேரே நம் வீட்டிற்கு வராமல் எங்கேயோ போய் இருக்கிறாயே! உன் அப்பாவாக இருந்தால் அப்படிச் செய்ய மாட்டான்’ என்று வெகு உரிமையுடன் கடிந்து கொண்டார் ராமபத்திரய்யர்.

வந்திருப்பேன் மாமா. பல வேலைகளை வைத்துக் கொண்டு வந்திருக்கிறேன். நினைத்தபோது சாப்பிடு கிறேன். இதற்கெல்லாம் செளக்கியமான இடம் ஹோட்டல் தான் என்று தீ ர் மா னி த் து ராஜம்பேட்டையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/17&oldid=682271" இலிருந்து மீள்விக்கப்பட்டது