பக்கம்:பனித்துளி.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி 169

இட்டு, குத்த விளக்கேற்றி வைத்து விட்டு, மகளை எழுப்புவாள் தாய். கார்த்திகை தீபத்தின்போது நடுக்கூடத் தில் ம்ற்ற தீபங்களுக்கெல்லாம் அரசியாக நடுவில் கொலு விருக்கும் குத் துவிளக்குதான் அது. இன்று தாயின் மரணப் படுக்கை அருகிலும் அவளுக்கு ஒளியைத் தந்து நின்றது.

‘ஒளியே! உன்னைப் பூஜித்து வந்த என் தாய் உன் ஒளியுடன் கலந்து விட்டாளா? அந்த ரகசியத்தை என்னிடம் சொல்ல மாட்டாயா நீ?’ என்று காமுவின் மனம் விளக்கைப் பார்த்துக் கேட்டது. விளக்கு, சுடரை உதறிவிட்டு மறுபடியும் ஆடாமல் நின்றது. அது அவ் விதிம் நின்றது மணப்பெண் ஒருத்தி முதன்முதல் கணவனுடன் பேசும் போது புரியும் புன்னகையைப் போல் இருந்தது-வெண்கல விளக்கின் கீழ் அழகான பெண்மணி ஒருத்தி வந்து உட்கார்ந்து கொண்டாள். என்ன கேட்கிறாய் காமு?’’ என்று வினாவினாள் உன் ஒளியோடு என் அன்னையின் உயிரும் கலந்து விட்டதா என்றுதான் கேட்கிறேன். ஏனென்றால், வாரம் தவறாமல் வெள்ளிக்கிழமைகளிலும், தினம் மாலையிலும் உன்னைப் பார்த்து பயபக்தியோடு வணங்கி உன் அழகில் லபித்து இருந்த என் தாய் உன்னை விட்டு எப்படிப் போய்விட முடியும்?’ காமுவின் மனம் பளிச் சென்று இப்படிக் கேட்டது.

“என்னை விட்டுப் போய் விட்டாள் என்று யார் கூறியது: கடைசி மூச்சி ன்போது கூட அருகில் நிற்கும் உன்னைக் கவனியாமல் என்னையே வெறித் துப்பார்த்தாளே உன் தாய். அவள் என்னிடம்தான் இருக்கிறாள்.’

‘உலகத்தைப் படைத்துக் காத்து அழிப்பது இந்த ஒளிதானா? அவனுக்கு ஒளி மயமானவன்’ என்றுதானே வேதங்களும், உபநிஷத்துக்களும் பெயர் கொடுத்திருக் ன்ெறன? அந்த ஒளி நீதானே? உலகைப் பிரகாசமூட்டும் சூரியனிலிருந்து இருளை விரட்டும் விளக்கிலும் வியர்பித்து இருப்பது நீதானே? உண்மையைச் சொல்லி விடு’ என்று கெட்டாள் காமு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/171&oldid=682273" இலிருந்து மீள்விக்கப்பட்டது