பக்கம்:பனித்துளி.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|

பனித்துளி 171

பெற்றோர். எதற்கெடுத்தாலும் பி ர த் தி .ே ய க ம ா ன மரியாதையை விரும்பும் மீனாட்சிஅம்மாள் வளைகாப்புக்குச் சம்பந்திகளே நேரில் வந்து அழைக்க வேண்டும் என்று விரும்பினாள். இரண்டு பக்கத்திலும் சம்பந்திகளின் உறவு முன்னைப்போல் இல்லை

நீலாவுக்கு உடம்புக்கு வந்ததே மாமியார் வீட்டில் கவனிக்காததனால்தான் என்று அவள் தாயார் நிஷடுரப் படுதினாள். சங்கரன் மனைவியிடம் போதிய அக்கறை காட்டவில்லை என்று டாக்டர் மகாதேவன் மாப்பிள்ளை மீது குறைப்பட்டார். ‘திடீரென்று மயக்கம் போடுவானேன்? எதிர்பாராத அதிர்ச்சிதான் அதற்குக் காரணம்’ என்று வாதித்தார் அவர். பெண்ணை அதைப்பற்றித் தனிமையில் எத்தனையோ தடவைகள் கேட்டும் பார்த்தார், அன்று காலையிலிருந்தே உடம்பு சரியாக இல்லை அப்பா என்று அவள் ஏதோ கூறி மழுப்பி விட்டாள்.

சங்கரன் கன்னத் தில் அறைந்த அறை அவள் கன்னத்தை மட்டும் வலிக்கவில்லை. இருதயத்தையும் வலித்தது. கணவன், மனைவியின் பிண்ைப்பு இன்னும் பலமாக அமைய வேண்டிய சமயத்தில்-நீலா ஒரு குழந்தைக்குத் தாயாக வேண்டிய சமயத்தில்-அந்தப் பிணைப்பு அறுந்து விட்டது. அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்டிருந்த சாதாரணப் பிளவு இப்போது அதலபாதாளமாகி விட்டது. நாட்டுப் பெண்ணை ஒரு தினம் மீனாட்சி அம்மாள் பார்க்கப் போயிருந்தபோது டாக்டர் மகாதேவன் மிகவும் கோபித்துக் கொண்டார். =

“உங்கள் வீட்டில் இருந்தபோது அவளை நீங்கள்’ சரியாகக் கவனிக்கவில்லை. இங்கே ஒய்வு எடுத்துக் கொள்ள அனுப்பி விட்டுத் தினம், நீங்களும் உங்கள் பிள்ளையும் வந்து தொந்தரவு செய்கிறீர்களே?’ என்றார் அவர்.

மாமியாரை வேண்டுமானால் வரவேண்டாம் என்று சொல்லி விடலாம் கணவன் ‘வ ரு வ ைத க் கூ ட அவர்

ஆட்சே பிக்கிறாரே. கொதித்துப் பொங்கிக் கொண்டே வீடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/173&oldid=682275" இலிருந்து மீள்விக்கப்பட்டது