பக்கம்:பனித்துளி.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 ‘பணித்துளி

வந்து சேர்ந்தாள் மீன்ாட்சி அம்மாள். சங்கரன் வந்ததும் ஆத்திரம் தீர இரைந்தாள்.

என்னை வேணுமானால் வர வேண்டாம் என்று சொல்லட்டும். உன்னையே வரக் கூடாது என்கிறாரே, உன் மாமனார் உன் மனைவிக்கு ரெஸ்ட் வேண்டுமாம். நீயும் நானும் போய் தொந்தரவு கொடுக்கிறோமாம். நீதான் பார்த்துக் கொண்டிருந்தாயே உன் கண்களால் அவள் இந்த வீட்டில் ஒரு வேலை செய்திருக்கிறாளா? குடும்பத்துக்கு என்ன வேண்டும் வேண்டாம் என்று கவனித்திருக்கிறாளா? பிள்ளைத்தாச்சி நாள் தவறாமல், வேளை சமயமில்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தால் உடம்புக்கு ஆகுமாடா? நீயே சொல்லேன்.” i.

‘அண்டை அசலில் நம் வீட்டைப் பார்த்துச் சிரிக்கப் போகிறார்கள் அம்மா. இப்படிக் கத்துகிறாயே, நானும் அவர்கள் வீட்டுக்குப் போகவில்லை, நீயும் போக வேண்டாம்!” என்று கூறினான் சங்கரன்.

நீலா நர்ஸிங் ஹோமிலிருந்து வீடு வருவதற்கு முன்பே சங்கரன் அங்கு போவதை நிறுத்திக் கொண்டு விட்டான். “இருக்கிறது ஒரு குழந்தை. அவள் ஏன் அங்கு போக வேண்டும்? மாப்பிள்ளை தான் நம் விட்டோடு வந்து இருக்கட்டுமே?” என்று நீலாவின் தாயார் ஷரத்’துப் பேசினாள். இதைப் போய் யாரோ ஒன்றுக்குப் பத்தாக மீனாட்சி அம்மாளிடம் முடிந்து விட்டார்கள். ‘மாப்பிள்ளை அவர்கள் வீட்டோடு வந்து இருக்க வேண்டுமாம். ஒரு பிள்ளையைத் தான் உயிரோடு பறிகொடுத்து வருஷக் கணக்கில் ஆகிறது. இவனையும் அவர்கள் வீட்டுடன் அனுப்பிவிட வேண்டுமாம். நன்றாக இருக்கிறதோ இல்லையோ நியாயம்?’ என்று பொருமினாள் மீனாட்சி.

சில நாட்களில் நீலா உடம்பு தேறி ஊரெல்லாம் காரில் சுற்றி வந்தாள். உங்கள் நாட்டுப் பெண் கச்சேரிக்கு வந்திருந்தாள் பார்த்தேன்’ என்றும், “சினிமாவில் பார்த்தேன்’ என்றும், தெரிந்தவர்கள் மீனாட்சி அம்மாளிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/174&oldid=682276" இலிருந்து மீள்விக்கப்பட்டது