பக்கம்:பனித்துளி.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 பனித்துளி

மீனாட்சி அம்மாள். நீலா நாத்தனாரை என்றுமே மதிப்பவள் இல்லை. ஆகவே அவளைத் தேடாமல் மாடி அறைக்குச் சென்றாள்.

அன்று சங்கரன், மாமனார் வீட்டிலிருந்து தன்னை அழைக்க யாராவது வருவார்கள் என்று எதிர்பார்த்துக் காரியாலயத்துக்கு விடுமுறை எழுதியிருந்தான். நீலாவிடம் ஏற்பட்ட அன்பினால் அல்ல அது. அவள் வயிற்றில் வளரும் குழந்தை அவனுடையது. அது பிறப்பதற்கு முன்பே தகப்பனால் திரஸ்கரிக்கப்படக் கூடாது என்கிற வாஞ்சை தான் காரணம்.

தயங்கிக் கொண்டே அறையில் நுழைந்த நீலாவை ஏறிட்டுப் பார்த்தான் சங்கரன். புதுப்புடவை உடுத்தி இரண்டு கைகளிலும் கண்ணாடி வளையல்கள் விதவிதமாக அடுக்கிக் கொண்டு வந்திருந்தாள் நீலா. இரண்டு மாதங் களுக்கு அப்புறம் இருவரும் சந்திப்பதால் யார் முதலில் பேசுவது என்று விளங்கவில்லை அவர்களுக்கு நீலாவே தன் பிடிவாதத்தை விட்டு விட்டு, முதலில் பேச. ஆரம்பித்தாள். “என்னுடைய முத்து மாலையை இங்கேயே வைத்து விட்டேன், எடுத்துப் போகலாமென்று வந்தேன்” என்றாள் நீலா. 1.

‘ஆஹா! தாராளமாய் எடுத்துப் போயேன். இத்தனை நாட்கள் இந்தப் பக்கம். வரத் தோன்றவில்லை உனக்கு. இன்றைக்காவது வந்தாயே!” என்றான் சங்கரன்.

‘நீங்கள்தான் எங்கள் வீட்டிற்கு வருகிறதுதானே?” என்று நிஷ்டுரமாகக் கேட்டாள் நீலா. -

சங்கரனுக்கு மனத்துக்குள் குமுறிக் கொண்டிருந்த கோபம் குபிரென்று கிளம்பியது. நாற்காலியை வேகமாகப் பின்னால் தள்ளி விட்டு எழுந்தான்.

‘உன் வீட்டுக்கு நான் வருகிறதா? என்னை வர வேண்டாமென்று உன் அப்பாதான் தடை உத்தரவு போட்டு

விட்டாரே? தேவியின் உடம்பு கெட்டுப் போகும் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/176&oldid=682278" இலிருந்து மீள்விக்கப்பட்டது