பக்கம்:பனித்துளி.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. பனித்துளி

மாட்டேங்குது” என்று டிரைவர் அழமாட்டாத குறையாகச் சர்மாவிடம் கூறி வருந்தினான். o

இந்த விஷயங்கள் அறைகுறையாக ராமபத்திர அய்யர் காதுகளில் விழுந்தன. காட்டு மிராண்டிகள்’ என்று ஒரு ஜாதியாரை ஒதுக்கி வைத்திருக்கிறார்களே, அவர்கள் கூட இப்படிக் கேவலமாக சண்டை பிடித்துக்கொள்வதாகக் கேட்டதில்லை. ஊரறிய நாடறிய தடபுடலாகக் கல்யாணம் செய்து, வரவேற்பும், டின்னரும், சங்கீதக் கச்சேரியும் அமர்க்களப் படுத்துவது? பிறகு நான் நீ என்று சண்டை போட்டுக் கொண்டு கோர்ட்டுக்குப் போவது? இது ஒரு நாகரிகமாக இருக்கிறது இந்தக் காலத்தில்! ஒன்றிரண்டு தடவைகள் சர்மா ராமபத்திர அய்யரைப் பார்க்க வந்த போது அவர் தம் குடும்பத்தின் அவலமான நிலைமையைக் கூறி வருந்தினார்.

“முதலிலேயே சொன்னேன் அப்பா. நமக்கு அவ்வளவு பெரிய இடத்துச் சம்பந்தம் வேண்டாம் என்று. மீனாட்சி கேட்கவில்லை’ என்று வருந்தினார் சர்மா.

‘நடந்ததை இனிமேல் மாற்ற முடியாது அப்பா, சங்கரனையாவது அங்கு போய் இருக்கச் சொல்லேன்’ என்றார் ராமபத்திர அய்யர்.

“எப்படியாவது போகிறார்கள் போ. நான் பாட்டுக்கு சம்பகத்தை அழைத்துக்கொண்டு யாத்திரை போய் விட்டு வரலாமென்று இருக்கிறேன். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு வழி. யாருக்கு என்று நான் புத்தி சொல்வது?’ என்று அலுத்துக் கொண்டார் சர்மா.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது பள்ளிக்கூடத் திலிருந்து காமு வந்தாள். சர்மா அப்பாவிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்புகிறதைப் பார்த்து உள்ளே சென்று, நீலாவின் ரவிக்கை துணிகளை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/180&oldid=682283" இலிருந்து மீள்விக்கப்பட்டது