பக்கம்:பனித்துளி.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 179

‘இதெல்லாம் என்ன அம்மா?’ என்று கேட்டார் சர்மா.

“உங்கள் நாட்டுப் பெண்ணிடம் கொடுத்து விடுங்கள் மாமா பரீட்சை சமயமாக இருக்கிறது, தைக்க முடிய வில்லை. என்னை மன்னித்துக் கொள்ளச் சொல்லுங்கள்’’ என்று வினயமாகக் கேட்டுக் கொண்டாள் காமு.

“இந்த விஷயமெல்லாம் எனக்குத் தெரியாது. நீயே அவைகளைக் கொண்டு வந்து சங்கரனிடம் கொடுத்த விடு. நீலா பிறந்த வீட்டுக்குப் போய் நாலைந்து மாசங்கள் ஆகின்றன. அவள் நம் வீட்டுக்கே வருகிறதில்லை’ என்று பதில் கூறிவிட்டு சர்மா புறப்பட்டார். அவர் சென்ற பிறகு தகப்பனாருக்குக் காபி கொடுத்துக்கொண்டே, ‘நீலா வீட்டாருக்கும், சர்மா வீட்டினருக்கும். ஏதோ சண்டையாமே? மாமா ஒன்றும் சொல்லவில்லையா உங்களிடம்?’ என்று கேட்டாள் காமு.

‘சர்மா சொல்லித்தான் எனக்குத் தெரிய வேண்டுமா அம்மா? அதுதான் ஊரெல்லாம் பேச்சாக இருக்கிறதே? பைத்தியக்காரப் பையன்? இந்த வைராக்கியத்தோடு அப்போதே உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொண் டிருந்தால் மற்ற சச்சரவுகள் எப்படி இருந்தாலும் அவன் வரைக்கும் சந்தோஷமாக இருந்திருப்பானோ இல்லையோ? அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நடுங்கிக் கொண்டு தலையை ஆட்டி விட்டுப் பேசாமல் இருந்தான். இப்பொழுது அவஸ்தைப்படுகிறான். படித்து விட்டால் மட்டும் போதுமா அம்மா? எது நல்லது எது கெட்டது என்று பகுத்தறியும் சக்தி வேண்டாமா?’ என்று சங்கரன் மீது இவ்வளவு காலம் அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தை யெல்லாம் கொட்டித் இll ,தார் ராமபத்திர அய்யர்.

‘நீலா பிறந்த வீட்டிலேயே இந்தால் சங்கரன் என்ன பண்ணுவார் அப்பா?’ என்று குழந்தையைப் போல் கேட்டாள் காமு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/181&oldid=682284" இலிருந்து மீள்விக்கப்பட்டது