பக்கம்:பனித்துளி.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. வேற்றுமையின் எல்லை.

நீலாவின் பிறந்த வீட்டாருடன் மனஸ்தாபம் ஏற்பட்ட பிறகு மீனாட்சி அம்மாளுக்குப் பாதிக் கொட்டம் அடங்கி விட்டது. யார் எங்கே அவளைப் பார்த்தாலும், உங்கள் பிள்ளை நாட்டுப் பெண்ணின் வளையல்களை நொறுக்கி விட்டாராமே?’ என்று கேட்டார்கள். “ஆயிரம் இருந்தாலும் சமயத்தில் விட்டுக் கொடுத்தது போல் நீங்களும், உங்கள் பெண்ணும் வரவே இல்லையே!” என்று வேறு கேட்டார்கள்.

சம்பகம் சங்கரனின் நிலையைக் கண்டு வருந்தினாள். அவனும், அவன் மனைவியும் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து அவள் ஆறுதல் அடையலாம் என்று நினைத் திருந்தது போக எக்கச்சக்கமாக அல்லவா நேரிட்டிருக் கிறது? கொழுந்தன் கொஞ்ச காலம் போய் மாமியார் வீட்டில் இருக்கட்டுமே என்று கூட நினைத்தாள் அவள். மனைவியிடம் அன்போ, ஆசையோ உடையவனாக இருந் தால் மாதக் கணக்கில் அவளைப் பாராமல் இருப்பானா? அதுவும் உள்ளூரிலேயே அவள் இருக்கும்பே து, அவளைப் பாராமல் எப்படி இருக்க முடிகிறது அவான எல். இவர்கள் கூட்டத்துக்கே மனைவியிடம் அபிமானம் இருக்காதுபோல் இருக்கிறது. வெளிநாட்டுக்குச் சென்றவ அடியோடு மனைவி, குழந்தை, பெற்றோர் என்பதை மறந்து போய் விட்டார். கொழுந்தன் என்னடாவென்றால் உள்ளூரிலேயே மனைவி இருப்பதை மறந்து உற்சாகமாக இருக்கிறாரே’ என்று வியந்தாள் சம்பகம்.

தினம் மாலையில் பானுவை வெளியே அழைத்துப் போவான் சங்கரன். அவளுக்கு விளையாட்டுச் சாமான்கள் வாங்கிக் சொடுத்து அழைத்து வருவான். கவலை இல்லாமல் திரியும் அந்தக் குழந்தையைப் பார்க்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/184&oldid=682287" இலிருந்து மீள்விக்கப்பட்டது