பக்கம்:பனித்துளி.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பனித்து iெ

நீலா பிரசவித்த செய்தி கடைசியாக அவர்களுக்கு எட்டியது. அதுவும் அரை குறையாக வந்து யாரோ சொன் னார்கள். அவர்களும் விவரமாகக் கூறவில்லை. சங்கரன் மனம் சந்தோஷத்தால் தவித்தது. பிறந்திருப்பது ஆணா, பெண்ணா? அது யாரைப் போல் இருக்கிறதோ? நீலாவைப் போல அழகாக இருக்கட்டும் ஆனால், குணத்துக்கு மட்டும் அவளைக் கொள்ள வேண்டாம்” என்று எண்ணினான். மாமனார் மாப்பிள்ளைக்கு நேரடியாக ஒன்றும் சொல்லி அனுப்பவில்லை. பெரியவராக இருக்கும் சர்மாவுக்கும் அவர் ஒன்றும் தெரிவிக்கவில்லை. யாராவது வருவார்கள் என்று வீட்டில் எல்லோரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். கெளரவத்தை விட்டுக்கொடுத்துக் கொண்டு முதலில் போகக்கூடாது என்று ருக்மிணி தாயாருக்குச் சொன்னாள்

காரியாலயத்துக்குச் சென்ற சங்கரனுக்கு இருப்பே கொள்ளவில்லை ஆபீஸ் காகிதங்களைக் கட்டி ஒரு பக்கம் வைத்து விட்டு, மேஜை அருகில் பேசாமல் உட்கார்ந்திருந் தான். நண்பர் ஒருவர், ‘என்ன அப்பா! மனைவி பிரசவித்து விட்டாளா?’ என்று வேறு கேட்டு வைத்து விட்டார். விஷயம் தெரிந்துதான் ஒரு வேளை தன்னைக்கேட்கிறாரோ என்று சங்கரன் நினைத்தான். பிரசவித்து விட்டாள்” என்று கூறினால், பெண்ணா, பிள்ளையா? எனக்குக் கல்கண்டு எங்கே! பூந்தி எங்கே’’ என்று நாலு பேரிடம் சொல்லி மானத்தை வாங்கி விடுவார். அவருக்கும் சண்டை மனஸ் தாபத்தைப் பற்றி ஏதோ கொஞ்சம் தெரியும். ‘மாசம் ஆகவில்லைபோல் இருக்கிறது ஸார்” என்று ஏதோ சொல்லி வைத்தான். ‘என்ன ஒய்! ஒரேயடியாய் மறைக்கிறீர். வளைகாப்பு நடந்து மூன்று மாசம் ஆகப் போகிறதே, கஜ கர்ப்பமா என்ன சார்?’ என்றார் நண்பர்.

மத்தியான வேளைகளில் நாலு பெண்கள் சேர்ந்து ஏதாவது பேசினால் ‘வம்பு பேசுகிறீர்கள்’ என்கிறார்கள் இந்தப் புருஷர்கள்! இவர்கள் ஆபீசில் பேசிப் கொள்வது எந்த ரகத்தைச் சேர்ந்த பேச்சோ புரியவில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/186&oldid=682289" இலிருந்து மீள்விக்கப்பட்டது