பக்கம்:பனித்துளி.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 185

வீட்டிற்கு வரக்கூடாதென்று தடை உத் தாவு போட்ட மாமனார் வீட்டைத் தேடி சங்கரன் போவதற்குத் தயங்கி னான். குழந்தையைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் அவனுடைய சுயமரியாதையையும் விட்டுக் கொடுக்கச் செய்து விட்டது. மாலை நான்கு மணிக்கு முன்பே காரியாலயத்தில், தான் அவசரமாக எங்கோ போக வேண்டும் என்று கூறி விட்டு நேராக நர்ஸிங் ஹோமு’க்குக் கிளம்பினான் சங்கரன். போகும் வழியில், நீலா தன்னிடம் எவ்வளவு அசட்டையாகவும் மரியாதைக் குறைவாகவும் நடந்து கொண்டாலும் அவைகளைப் பாராட்டாமல், கூடுமானவரையில் அவளுடன் சந்தோஷமாகப் பேசிவிட்டுக் குழந்தையைப் பார்த்து வருவது என்று தீர்மானித்துக் கொண்டான்.

‘நர் ஸிங் ஹோமு’க்குள் அவன் நுழையும் போதே அவனைப் பார்த்துக் கசமசவென்று நர்ஸ்கள் பேசிக் கொண்டு அவனுக்கு வழி விட்டனர். நேராக நீலா படுத்து இருந்த அறைக்குள் சென்றான். கட்டிலுக்கு அருகில் இருந்த தொட்டில் காலியாக இருந்தது. நீலா அயர்ந்து தாங்கிக் கொண்டிருந் தாள். ஒரு வேளை பால் புகட்டு வதற்காகத் தாதி குழந்தையை வெளியே எடுத்துப் போயிருப்பாளோ? கட்டிலுக்கு அருகிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்து நீலாவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந் தான் சங்கரன். வெளுத்துப்போய் களை இழந்து மிகவும் ()ளைத்துப் போய் இருந்தாள் அவள். தலைச்சன் பிரசவத் துக்கே இவ்வளவு பலவீனம் ஏற்படுமா என்ன என்று தோன்றியது அவனுக்கு. சிறிக நேர ம் கழித்து நீலா விழித்துக் கொண்டாள். எதிரில் கணவன் உட்கார்ந் ருெப்பதைப் பார்த்து ஆவலோ, பதட்டமோ அடையாமல் மெளனமாக இருந் தாள். இன்று சங்கரனே முதலில் 1 கொங் ‘உடம் பக்க ஒன்றுமில்லையே நீலா? எனக்கு _ சொல்லி அனுப்ப வில்லை?” என்று சுவாதீனமாகக் ப_ா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/187&oldid=682290" இலிருந்து மீள்விக்கப்பட்டது