பக்கம்:பனித்துளி.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 189

இதிலே என்ன தவறு?’ என்று நினைத்துச் சம்பகம், “அவர்தான் போய் அழைத்து வரட்டுமே!’ என்று சொன்னாள்.

‘தவறு ஒன்றுமில்லைதான். அவள் பிற்பாடு தலைமேல் ஏறுவாளே? அவ்வளவு கர்வம் பிடித்தவள் ஆயிற்றே அவள்?’ என்று மீனாட்சி கோபித்துக் கொண்டாள். -

ஊரிலும் நண்பர்கள் அவனைப் பற்றியும் அவன் மனைவியைப் பற்றியும் பலவிதமாகப் பேசிக் கொண்டனர். “வீட்டுக்கு அழைத்து வந்த பிறகு பிறந்த வீட்டுக்கே போகக் கூடாது என்று கண்டித்து வையுங்கள் சார்!’ என்று நெருங்கிய நண்பர் ஒருவர் கூறினார். சங்கரன் வீட்டு மனஸ்தாபத்தைப் பற்றி நண்பர்கள் அவன் எதிரிலேயே தைரியமாகப் பேசும் அளவுக்கு மனஸ்தாபம் முற்றிப் போயிருந்தது! நாலு பேருக்காகவாவது மனைவியை அழைத்து வந்தாக வேண்டும். இல்லாவிட்டால் ஊர் பிரிக்கும்.

இதற்கிடையில் அவன் தாயார் ஒரு தினம் அவன் காரியாலயத்துக்குக் கிளம்பும்போது, “ஏண்டா சங்கரா! உன் மனைவி டாக்டருக்குப் படிக்கிறாளா மேடா? காலேஜிலே சேர்ந்து விட்டாளாம். சமையற்கார மாமி பார்த்ததாகச் சொன்னாள்’ என்றாள்.

‘படிக்கட்டுமே! அதனால் தவறு ஒன்றுமில்லையே. அங்கே இருந்து படிப்பதை இங்கே வந்து படிக்கட்டும்’ என்று தாயாருக்குப் பதில் கூறினான் சங்கரன்.

அன்றே நீலாவின் வீட்டுக்கு அழையா விருந்தாளியாகப் போனான் சங்கரன். வீட்டில் அவள் தகப்பனார் இல்லை. தாயார் மட்டும் இருந்தாள். ஒரு மாதிரியாகத் தலையை அசைத்துவிட்டு அந்த அம்மாள் மாடிக்குப் போனாள். சிறிது நேரத்துக்கெல்லாம் நீலா மாடிப் படிகளில் நிதானமாக இறங்கி வந்து அவன் எதிரில் இருந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டாள். இருவரும் சிறிது நேரம் தலையைக் குனிந் த வண்ணம் பூமியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/191&oldid=682295" இலிருந்து மீள்விக்கப்பட்டது