பக்கம்:பனித்துளி.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்தார்கள். பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடந்த நம் கல்யாண பந்தத்தை நீ இவ்வளவு சீக்கிரம் தகர்த்துவிட முயலுவது சரியென்று எனக்குப் புலப்படவில்லை. உன் பெற்றோரைக்கேட்ாயா?அவர்கள் என்ன சொன்னார்கள்! அவர்கள் அபிப்பிராயம் என்ன என்று எனக்குத் தெரிய வேண்டாமா?’ என்று கேட்டான் சங்கரன்.

நிலாவின் முகத்தில் சலனம் ஏதும் ஏற்படவில்லை. வைராக்கியத்தின் எல்லைக் கோட்டிலே நிற்கும் ஞானியின் முகத்தைப் போல் அது அவ்வளவு தெளிவாக இல்லா விட்டாலும், உணர்ச்சியற்ற முகமாகக் காட்சி அளித்தது. கணவன் என்றோ, காதலன் என்றோ எந்த விதமான உணர்ச்சிகளையும் அந்த முகம் காட்டவில்லை. ஆசைக் கணவனைக் கண்டதும் அகமும், முகமும் மலர வரவேற்கும் அன்பு மனைவியின் முகபாவம் எதுவும் அந்த முகத்தில் காணப்படவில்லை. காதலனின் .ெ ப ய ைர க் கேட்ட மாத்திரத்தில் மனத்தில் எழும் இன்ப நினைவுகளால் பொங்கிப் பூரிக்கும் காதலியின் எழில் ததும்பும் முகபாவத் தையும் நீலாவின் முகம் காட்டவில்லை. உனக்கும் எனக்கும் உறவு உண்டு என்பதே உண்மைதான்ா? அந்த உறவின் பிடிப்புக்குள் நாம் சிக்கித்தான் தவிக்க வேண்டுமா?’ என்று கேட்பது போல் நீலா நின்றிருந்தாள்.

கணவன், மனைவி என்கிற உறவில் ஏற்படும் அன்பில் சிக்கித் தவிப்பது ஒருவிதமான பந்தம். அந்த அன்பு இருவருக்கும் பூரணமாக அமைந்து விட்டால், பிறகு எத்தனையோ சண்டைகள், சச்சரவுகள், பிளவுகள் எல்லாம் சரிப்பட்டுப் போய்விடும். “பூரணமான அந்த மன ஒற்றுமை *...*. வாழ்க்கையில் ஏற்படவில்லை. அந்தக் ாலத்தில் கூட இம்மாதிரி தவிப்புகளும், சிக்கல்களும் நிறைய ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், மனத்தைத் திறந்து மனைவி வெளியே சொல்ல அஞ்சினாள். அவளை வெளியே தைரியமாகப் பேசவிட அன்றைய சமூக நிலையும் இடங் கொடுக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/194&oldid=682298" இலிருந்து மீள்விக்கப்பட்டது