பக்கம்:பனித்துளி.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 195

கையிலிருந்த புஸ்தகத்தை மேஜைமீது வைத்துவிட்டு, அவள் கீழே இறங்கி வந்தபோது கூ டத்தில் அவள் பெற்றோர் உட்கார்ந்திருந்தனர். ஏதோ முக்கியமான விஷயத்தைப் பற்றி அவர்கள் பேசிக் களைத் துப் போயிருக் கிறார்கள் என்பதை அவர்களுடைய முகபாவமே காட்டியது. அம்மாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள் நீலா பிறகு அவளுடைய மடியில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். அந்த அம்மாளின் கண்களிலிருந்து கண்ணிர் பெருகி வழிந்தது. நீலா தன் தாய் துக்கத்தை அடக்க முடியாமல் விசும்புவதைக் கேட்டு நிமிர்ந்து, ஏனம்மா அழுகிறாய்?’ என்றுகேட்டாள்.

அந்த அம்மாளின் மனத்தில் அவளுடைய பால்ய காலத்து நினைவுகள் எழுந்தன. நீலாவுக்கு முன்பு நான்கு ஆண் குழந்தைகள் அவளுக்குப் பிறந்து இறந்து போயின. ஒவ்வொன்றும் தங்க விக்ரகம் மாதிரி இருந்தது. பெட்டி பெட்டியாக வித விதமான உடுப்புக்களாக வாங்கி வைத்திருந்தாள். ஒவ்வொரு மகனும் படித்துப் பட்டம் பெற்று ஒவ்வொரு துறையில் பிரகாசிப்பான் என்று கனவு கண்டாள். முதல் குழந்தை தவறிப்போனதும், சில காலமே அந்த வருத்தம் இருந்தது. இரண்டாவது குழந்தை மூன்று வயக வரை வளர்ந்து போய்விட்டது. மூன்றாவது குழந்தை கார் விபத்தில் சிக்கி மாண்டு விட்டது. நான்காவது பிள்ளையும் ஏதோ நோயினால் போய்விடவே அந்தத் தாய் உள்ளம் பூர்ண ஆயுளைப் படைத்த ஒரு குழந்தைக்காக ஏங்கித் தவித்தது. பிறகுதான் நீலா பிறந்தாள்.

நீலா வார்க்கப்பட்ட சூழ்நிலையே வேறு. பிறந்த அந்தாறு வயசு வரையில் அவளை ஆனா பெண்ணா என்று யாருமே கண்டுபிடிக்க முடியாது, தலையை கிராப்’ வெட்டி, நிஜாரும், சட்டையும் போட்டுப் பார்த்து ாறு தாள் தாய். அவள் பெரியவளாகி படிப்பில் | lான ஆசையை வெளியிட்டபோது, அவளுடைய மவம் |Los | l க் தில் - ஆழ்ந்து விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/197&oldid=682301" இலிருந்து மீள்விக்கப்பட்டது