பக்கம்:பனித்துளி.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. எதிர்பாராத சம்பவங்கள்

அன்று மாசி நோன்பு. ஒருக்காலும் கணவனை

விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும்’ என்பதற்காகப் பெண்கள் அன்னை கெளரியை வணங்கிப் பூசிக்கும் தினம். அதிகாலையில் எழுந்து சம்பகம் நோன்புக்காக ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தாள். பலபலவென்று பொழுது விடியும் வேளையில் வீட்டில் இருப்பவர்கள் பூஜை செய்து, மங்களகரமான மஞ்சள் சரட்டைக் கழுத்தில் கட்டிக் கொண்டார்கள். சம்பகத்தின் மனத்திலே ே த.வி ைய வணங்கும்போது, ஒரு விதத் தாபம் ஏற்பட்டது.

கணவனைப் பிரிந்து வாடுவது எத்தனை துயரமான விஷயம்! அந்தப் பிரிவு சகிக்க முடியாததாக இருந்தால் நோன்புகள், விரதங்கள் செய்து தேவியின் அருளை யாசித்துப் பெற முயற்சி செய்கிறோம். அவள் கணவன் உயிருடன் அவளைப் பி ரி ந் து போய் எ த் த ைன வருஷங்கள் ஆயின? இனிமேல் வாழ்க்கையில் அவனுடன் அவள் சேர்ந்து வாழப்போகிறாளா’ என்றெல்லாம் கேள்விகள் எழுந்து, சுடு சரமாக அவள் இதயத்தைப் பொசுக்கின. +

இலையிலே வைத்திருந்த பலகாரங்களைக் கூடச் சாப்பிடாமல் உட்கார்ந்திருந்த சம்பகத்தைத் தேடி சர்மா சமையலறைக்கு வந்தார். பணிவும், அடக்கமும் உருவான சம்பகம் அவரைக் கண்டதும் மரியாதையுடன் எழுந்து நின்றாள்.

“அம்மா சம்பகம்! உன் பெயருக்கு ஒரு கடிதம் வந்திருக் கிறது. உன் புருஷன்தான் எழுதி இருப்பான். எழுத்தைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது. எனக்கும் ஒரு கடிதம் போட்டிருக்கிறான்” என்று கூறி, அவளிடம் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/200&oldid=682305" இலிருந்து மீள்விக்கப்பட்டது