பக்கம்:பனித்துளி.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 199

கடிதத்தைக் கொடுத்து விட்டுப் போனார். சம்பகம் அவசரமாக எழுந்து தன் அறைக்குள் சென்று கடிதத்தைப் பிரித்து வாசிக்க ஆரம்பித்தாள். -

‘அன்புள்ள சம்பகத்துக்கு ஆசீர்வாதம். அன்புக்கும் ஆசைக்கும் அர்த்தம் தெரியாத எனக்கு உன்னை அன்புள்ள சம்பகம்’ என்று அழைக்கவே தயக்கமாக இருக்கிறது. உன்னுடைய நலனையோ, நம்முடைய குழந்தையின் நலனையோ இத்தனை வருஷங்களாக அறிந்து கொள்ளாமல் இருந்த என்னை மன்னித்து விடு...!”

இதுவரையில் படித்தவுடன் கண்களில் நீர் வழியத் தன் மனதுக்குள், “மன்னிப்பா? அதெல்லாம் எதற்கு? கணவன் என்று கைப்பிடித்த நாளாய் யாருடைய அன்பை சதம் ன்ன்று நம்பி இருக்கிறேனோ அந்த அன்பர் என்னை நினைவு வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது ஒன்றே போதாதா?” என்று எண்ணினாள் சம்பகம். பிறகு மேலும் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தாள். -

“நான் சீக்கிரமே தாய்நாடு திரும்புகிறேன். மனிதன், மனத்தை அடக்கத் தெரியாததனாலும், சந்தர்ப்பக் கோளாறுகளாலும் வாழ்க்கையில் நெறி தவறி விடுவது சகஜம்தான். பகவானே தன்னுடைய அவதாரங்களுக்குத் தகுந்தபடி தர்மங்களை அனுசரித்ததாக நாம் கதைகளில் படிக்கிறோம். இங்கே என்னுடன் வாழ்ந்த பெண் என்னை விவாகரத்துச் செய்து விட்டாள். இந்த நாட்டில் அதற்கெல்லாம் அவசியமான காரணங்கள் தேவையில்லை. ஒரே கால்சாரங்களை அனுஷ்டிக்கும் தம்பதிகளில் சிலர், நம் நாட்டில் ஒத்து வாழ முடியாமல் சண்டையும், பூசலுமாக வாழ்க்கை நடத்துவது உனக்குத் தெரியும். ஆகவே, வெவ்வேறு பழக்க வழக்கங்களில் ஊறிப் போன எங்களுக்குள் நாளுக்கு நாள் அபிப்பிராய பேதம் தான் o அறிகமாயின. முடிவில் அவளும் நானும் விலகி விட்டோம்! இது இங்கே சர்வ சகஜமான நிகழ்ச்சி. இதனால் எங்கள் இருவர் மனத்திலும் வருத்தமோ, அனுதாபமோ எதுவும் சrழவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/201&oldid=682306" இலிருந்து மீள்விக்கப்பட்டது