பக்கம்:பனித்துளி.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி - 203

தானே? வேலையெல்லாம் எப்படி இருக்கிறது?’ என்று கேட்பான் சங்கரன்.

ஹஅம்...செளக்யந்தான். வேலையா? க ஷ் ட மாக ஒன்றுமில்லை. குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து அவர்களுடன் பழகுவதில் ஒருவித இன்பம் ஏற்படுகிறது” என்று பதில் கூறிவிட்டு காமு சென்று விடுவாள். புன்சிரிப்புடன் அவள் பேசுவதும், அவனைக் கண்டதும் கைகளைக் கூப்பி நமஸ்காரம்’ என்று சொல்வதுமே ஒரு தனி அழகாக இருந்தது.

இப்படியிருக்கையில், சர்மாவின் வீட்டில் அவரும் அவர் மனைவி மீனாட்சி அம்மாளும் நீலா கூறியதை அப்படியே நம்பவில்லை. ‘என்னவோ கோ. ப த் தி னா லு ம், அவசரத்தினாலும் அந்தப் பெண் அப்படிப் பேசி இருக்கிறது. தானாக இங்கே வந்து சேரும்’ என்று மீனாட்சி அம்மாள் சொல்லிக் கொண்டிருந்தாள். *

“அவள் வேண்டாம் என்று சொன்னால் நாம் விட்டுவிட முடியுமா? அவள் அப்பாவும், அம்மாவும் பேசாமல் இருந்து விடுவார்களா?’ என்று சர்மாவைக் கேட்டாள் அந்த அம்மாள்.

“அதெல்லாம் உன் காலம். நான் உன்னை வேண்டாம் என்று சொல்லி இருந்தால், உங்கள் பிறந்தகத்து ஊர் பூராவும் திரண்டு எனக்குப் புத்திமதி கூற வந்திருப்பார்கள். நீயும் கதவு மூலையில் க்ண்ணைக் கசக்கிக் கொண்டு நின்றிருப்பாய். இப்பொழுது நடப்பது ஜனநாயக யுகம். திரேதாயுகம், துவாபரயுகம் மாதிரி ஜனநாயக யுகத்தில் நம் காலத்துப் பேச்சுகள் எல்லாம் செல்லாது. புருஷனுக்கு மனைவியை வேண்டாம் என்று தகுந்த காரணங்களுடன் சொல்லவும், மனைவி புருஷனை வேண்டாம் என்று ஒதுக்கவும் சட்டமே வந்துவிட்டது” என்றார் சர்மா.

‘அந்தச் சட்டம் நம் வீட்டிலேதான் முதலில் வந்து நுழைய வேண்டுமா? எனக்கு ஒன்றுமே தெரிய வில்ைைலயே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/205&oldid=682310" இலிருந்து மீள்விக்கப்பட்டது