பக்கம்:பனித்துளி.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி - 205

காமு அவனை மணப்பதற்குச் சம்மதிப்பாளா? ராமபத்திர அய்யர் நியாயத்துக்குக் கட்டுப்பட்டவர் ஆயிற்றே? அவர் இந்த விவாகத்துக்குச் சம்மதிப்பாரா? சங்கரனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. காமுவின் அபிப்பிராயத்தை யார் தெரிந்து கொண்டு வந்து சொல்லுவார்கள்? அவன் நியாயத்தை மீறி நடப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. நீலாவே அவனை வேண்டாம் என்று கூறி ஒதுங்கிப் போகிறாள், ஆகவே குற்றம் அவனுடையது அல்லவே?

இந்த எண்ணம் தோன்றிய பிறகு, சில தினங்கள் வரை யில் சங்கரன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தான். பிறகு துணிந்து தகப்பனாரிடம் தன் கருத்தை வெளியிட்டான் அவன். --

சர்மா சந்தோஷத்துடன் அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டார். “உனக்குச் சம்மதமானால் எனக்கும் திருப்தி தான் அப்பா. பணத்துக்காக ஆசைப் பட்டுச் செய்து கொண்ட கல்யாணம் தான் இவ்வளவு லட்சணமாக இருக்கிறது. ராமபத்திரனைப் போய் நீயே கேட்டுப்பார். காமுவையும் நேரில் கேட்டு விடு. அவர்கள் சம்மதித்தால் ஒருவருக்கும் தெரியாமல் ஏதோ கோவிலில் போய்க் கல்யாணத்தைப் பண்ணிக் கொண்டு மனைவியை அழைத்து

= } +

வந்து சேர்’ என்றார் சர்மா பிள்ளையிடம்.

காமுவும், அவள் தகப்பனாரும் சரி என்று கூற வேண்டுமே என்று தெய்வங்களை எல்லாம் பிரார்த்தித்துக் கொண்டான் சங்கரன்.

அடுத்த நாள் அதிகாலையில் காரியாலயத்துக்கு விடுமுறை எழுதி விட்டு ராமபத்திர அய்யரைப் பார்ப்பதற் குக் கிளம்பினான் சங்கரன். அவன் தெருவுக்கு வரும்போது தந்திச் சேவகன் ஒருவன் சங்கரனிடம் தந்தி ஒன்றைக் கொடுத்து விட்டுச் சென்றான். சர்மாவின் பெயருக்குத் தந்தி வந்திருந்தது. யாரிடமிருந்து வந்திருக்கும்’ என்கிற கலக்கத்துடன் தந்தியைப் பிரித்து வாசித்த சங்கரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/207&oldid=682312" இலிருந்து மீள்விக்கப்பட்டது