பக்கம்:பனித்துளி.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 பனித் துளி

ராமபத்திர அய்யருக்கு இதெல்லாம் வினோதமாக இருந்தது. காலம் எப்படித் தலைகீழாக மாறி இருக்கிறது என்பதை நினைத்து ஆச்சர்யப்பட்டார் அவர்.

அடுப்பங்கரையில் அவசர வேலையில் ஈடுபட்டிருந்த காமு கூட அதை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்து கேட்டாள். ஆச்சர்யத்தில் அழகிய விழிகள் மலர சங்கரனை விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

15. காமுவின் கல்யாணம்

நீலாவா சங்கரனை வேண்டாம் என்கிறாள்? இந்திர பதவியை வேண்டாம் என்றானாம் ஒருவன்! அதைப்போல அல்லவா இருக்கிறது இந்த விஷயம்? அழகும், படிப்பும், குணமும் நிரம்பிய சங்கரனை மணந்த பாக்கியசாலி அவள் என்று அல்லவா நீலாவைக் காமு நினைத்திருந்தாள்? அந்த பாக்கியம் தனக்குக் கிட்டவில்லையே என்று அவள் ஏங்குவது கொஞ்சமா? காமுவின் மனம் இவ்விதம் எண்ண் மிட்டது.

சங்கரன், தான் அங்கு வந்திருக்கும் காரணத்தைக் கூறி ராமபத்திர அய்யரை எப்படிக் கேட்பது என்று புரியாமல் விழித்தான். தன்னுடைய மறு விவாகத்தைப் பற்றி அவராகவே கேட்பாரா என்றும் எதிர்பார்த்தான். ஆனால் பரந்த மனமுடைய ராமபத்திர அய்யர் ஒன்றும் பேசவில்லை. -- H

‘பிறகு என்ன செய்யப் போகிறாய்? வயசான காலத் தில் உன் அப்பாவுக்குத் தான் இதெல்லாம் கஷ்டம். மீனாட்சி எப்பொழுதுமே பணத்துக்குத் தான் மதிப்பு கொடுத்து வருகிறாள் அப்புா. சம்பகம் பணக்கார இடத்துப் பெண்தான். இருந்தாலும் பதவிசாக இல்லையா? பாவம்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/210&oldid=682316" இலிருந்து மீள்விக்கப்பட்டது