பக்கம்:பனித்துளி.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 பனித்துளி

இருக்கலாம். ஒற்றுமையும் ஐக்யமும் இருக்கும் வரையில் தான் கூட்டுக் குடும்பம் நடத்த முடியும். அது இல்லை என்று ஏற்பட்ட பிறகு மனஸ்தாபங்களை வளர்த்துக் கொண் டாவது ஒன்றாகத் தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல’’ என்றார் சர்மா.

தாய்க்குப் பின்னால் வந்து இதுவரையில் இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ருக்மிணி, அப்பாவுக்கு எப்பொழுதுமே அண்ணா பேரிலே ஆசை அதிகம். அதுவும், அவன் சீமைக்கெல்லாம் போய்ப் படித்துவிட்டு வருகிறான் என்றால் அவரைப் பிடிக்க முடியுமா இனிமேல்?’ என்றாள். சர்மா மகளைக் கேலியாகப் பார்த்தார். ‘என்னை நீங்கள் எல்லோரும் புரிந்து கொண்டது இவ்வளவுதான்! எனக்கு எல்லோருமே ஒன்றுதான். நாளைக்கு உன் புருஷன் ரங்கூனை விட்டு இங்கே வருகிறான் என்றால் உனக்கும் ஒரு வீடு வாங்கி வைத்து விடுவேன். அப்பொழுது உன் அம்மா பாடுதான் திண்டாட்டமாக முடியும். பெரிய பிள்ளையிடம் இருப்பதா, சங்கரனிடம் இருப்பதா அல்லது உன் வீட்டுக்கு வருவதா என்று புரியாமல் திணறிப் போவாள்’ என்றார்.

‘திணறவும் வேண்டாம், திண்டாடவும் வேண்டாம். யார் வேண்டுமானாலும் எங்கேயாவது போகட்டும். நான் சிவனே என்று உங்களோடு இருந்து விட்டுப் போகிறேன். வயசான காலத்தில் நாம் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் தனி யாக இருப்பானேன்?’ என்று கூறி மீனாட்சி அம்மாள் அங்கே நடந்து வந்தவாக்குவாதத்தை முடித்துவைத்தாள்.

அடுத்த நாள் சம்பகத்தின் கண்வன் ஊரிலிருந்து வந்தான். அவனும், அவன் மனைவியும், குழந்தையும் தனிக் குடித்தனம் போகும் முன் மீனாட்சி அம்மாள் வீட்டுக்கு வேண்டிய பண்டங்களை எடுத்து வைத்தாள்.

“போனதும், போகாததுமாக நீ ஒன்றுக்கும் கடைக்கு அலைய வேண்டாம். ஒரு மாசத்துக்கு மேல் காணும்படி சமையல் பண்டங்கள் அந்தக் கூடையில் வைத்திருக்கிறேன்’ என்றாள். *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/214&oldid=682320" இலிருந்து மீள்விக்கப்பட்டது