பக்கம்:பனித்துளி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி 27

படைத்தவள் அந்த அம்மாள். நிராதரவாக மனைவியையும், குழந்தையையும் விட்டு விட்டு, அயல் நாட்டில் வேறு மணம் செய்து கொண்டு வாழும் பிள்ளையிடம் காண்பிக்க வேண்டிய வெறுப்பை நாட்டுப் பெண் சம்பகத்திடமும், அவள் ஒரே குழந்தையிடமும் காண்பித்து வந்தாள் மீனாட்சி அவளுடைய அதிர்ஷ்டக் குறைவால்தான் தன் பிள்ளை வீடு வாசலை விட்டுக் கண்காணாத இடத்துக்குப் போய் விட்டான் என்று துாற்றினாள் அவள்.

இவ்விதம் செல்வத்தினால் சகல பாக்கியங்களையும் அனுபவிக்க முடிந்திருந்தும் குண வேறுபாட்டால் அவன் குடும்பத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக இருந்தனர்.

அன்று சாப்பாட்டுக்கு அப்புறம் சங்கரனும், ராமபத்திர அய்யரும் ஊஞ்சலில் அமர்ந்து உலக விஷயங் களைப் பற்றி ஏதோ பே சி க் கொண் டி ரு ந் த னர். சமையலறையைப் பெருக்கி சுத்தம் செய்யும் காமுவின் மேல் சங்கரனின் பார்வை அடிக்கொரு தரம் சென்று மீண்டது. கறுப்பு நிறத்தில் அரக்குக் கரைபோட்ட புடவையும், சாதாரண பச்சை சிட்டி ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள் காமு.கழுத்தில் இரட்டை சரம் கருகமணி மாலையில் சிறிய பதக்கம் ஒன்றைப் பொருத்தி அணிந்திருந்தாள். அதன் நடுவில் பதிந்திருந்த ரத்தினத்தின் சிவப்பைப் போல் அவள் குவிந்த அதரங்களும் தாம்பூலத்தால் சிவந்திருந்தன. கையில் சிவப்பும் பச்சையும் கலந்த கண்ணாடி வளையல் களை அணிந்திருந்தாள். சாட்டை போல் துவளும் பின்னலை அன்று மலர்ந்த குண்டு மல்லிகைச் செண்டு அலங்கரித்தது. ‘டானி’க்குகளாலும், மாத்திரைகளாலும் பெற முடியாத உடல் வனப்பை வீட்டு வேலைகள் செய்வ தாலும், அன்பையும் பொறுமையையும் கடைப் பிடிப்ப தாலும் பெண்கள் அடைந்து விடலாம் என்பதற்கு அத்தாட்சியாகவே காமு விளங்கினாள்.

சமையலறையைச் சுத்தம் செய்துவிட்டு, சவுக்கம் பின்னும் நூலையும் ஊசியையும் எடுத்துக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/29&oldid=682332" இலிருந்து மீள்விக்கப்பட்டது