பக்கம்:பனித்துளி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பனித்துளி

உளஞ்சலைத் தாண்டிக் காமரா அறைக்குள் சென்றாள் காமு. அந்தக் கொஞ்ச நாழிகைக்குள் காமுவின் முகம் குங்குமம்போல் சிவந்துவிட்டது. சங்கரனும் ஏதோ உணர்ச்சியால் தாக்கப்பட்டவன் போல் ராமபத்திரய்யர் பேசுவதையும் கவனியாமல் உட்கார்ந்திருந்தான்.

‘பெரிய பண்ணை இருக்கிறாரே, அவருக்கு ஒரு பெண் இருக்கிறது. வயசு பதினாறுக்குமேல் இருக்காது. சுமாராக லட்சணமாகத்தான் இருப்பாள். உனக்கு வேண்டுமானால் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. உன் அப்பாவுக்கு எழு தட்டுமா, சங்கரா?” என்று ஆரம்பித்தார் ராமபத்திரய்யர். சங்கரனோ, சாட்சாத் சங்கரன் கைலையில் உமாதேவியைப் பார்த் துப் பரவசமடைந்திருந்த நிலையில் இருந்தான் காமுவைப் பார்த்தபடி. சட்டென்று சுய உணர்ச்சி அடைந்தவனாக, ‘சே, சே, எனக்கு என்ன மாமா கல்யாணத் துக்கு அவசரம்?’ என்று அசடு வழியக் கூறிவிட்டு ராஜம்பேட்டைக்குப் புறப்படுவதற்காக ஊஞ்சலை விட்டு எழுந்தான்.

பாதி திறந்திருந்த கதவின் வழியாகக் காமு சங்கரனைப் பார்த்தாள். நேருக்கு நேர் பார்க்கக் கூசிய கண்கள் இப்பொழுது திருட்டுத்தனமாகப் பார்ப்பதால் கூசவில்லை போலும்! கையில் பின்னும் தாமரைச் சவுக்கத்தில் எவ்வளவோ தவறுகள் நேர் ந்திருப்பதை அவள் கவனிக்க வில்லை. சங்கரன் கிளம்பியதும் காமரா அறையின் கதவை லேசாகத் திறந்து கொண்டு வாயிற்படி அருகில் நின்றாள் சாமு. --

அப்பா இன்னும் அரை மணியில் காபி ஆகிவிடும். அவரைச் சாப்பிட்டுவிட்டுப் போகச் சொல்லுங்கள்’ என்றாள் பதவிசாக . -

“சாப்பாடே ஒ ேர ய டி யா க த் திணறுகிறது! அதற்குள்ளாகவா காபி சாப்பிட முடியும். நாளைக்கு வருறேன் மாமா, காபி சாப்பிட!’ என்று. ராமபத்திர அய்யரைப் பார்த்துக் கூறிவிட்டுப் புறப்பட்டான் சங்கரன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/30&oldid=682334" இலிருந்து மீள்விக்கப்பட்டது