பக்கம்:பனித்துளி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி 29

சங்கரனை வழி அனுப்ப வாசல் வரையில் போய் விட்டு வந்த ராமபத்திரய்யர் கையில் ஒரு தபால் கவருடன் ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தார்.

கடிதம் விசாலாட்சியின் ஒன்றுவிட்ட தம்பி முத்தையாவிட மிருந்து வந்திருந்தது. நா ைல ந்து வருஷங்களாக அவனிடமிருந்து தகவல் ஒன்றும் அதிகமாகத் தெரியாமல் இருந்தது. திடீரென்று ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு அவன் இரண்டாவது மனைவி தவறிப்போன செய்தியைத் தாங்கிய கடிகம் ஒன்று வந்தது. முதல் மனைவி தவறிய இரண்டு மாசங்களுக் கெல்லாம் இரண்டாவது கல்யாணம் பண்ணிக் கொண்டான். முதல் மனைவிக்கு மூன்று குழந்தைகள் இ ரு ந் தா ர் க ள். முத்தையாவுக்கும் வயசு முப்பத்தி ஒன்றுக்கு மேல் ஆகாமல் இருந்ததால் அவனுடைய இரண்டாவது கல்யாணத்தைப் பற்றி யாரும் அவ்வளவாகக் குறை கூறவில்லை. இரண்டாவது மனைவியும் நான்கு குழந்தைகளை விட்டு விட்டுப் போய் விட்டாள் -

“ஐயோ பாவம்! ஏழு குழந்தைகளை வைத்துக்கொண்டு அவன் என்ன பண்ணுவான்’ என்று விசனித்தாள் விசாலாட்சி, துக்கச் செய்தி வந்தபோது. =

“என்ன பண்ணுகிறது? யாரையாவது சமையலுக்கு வைத்துக் கொண்டு குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் வரை கா ல த் ைத க் கடத்த வேண்டியதுதான்’ என்றார் ராமபத்திரப்யர்.

‘பனங் காசுக்குக் குறைவில்லாமல் இருந்தாலும், வீட்டிலே ஒருத்தி இருக்கிற மாதிரி ஆகுமா இதெல்லாம்?’’ என்று விசாரப்பட்ட விசாலாட்சி அன்றே துக்கம் விசாரிக்கத் தம்பியின் வீட்டுக்குப் புறப்பட்டு விட்டாள்.

ஊரிலிருந்து திரும்பி வந்த பிறகு பத்து தினங்கள் வரையில் முத்தையாவின் செல்வத்தைப் பற்றியும், அவன் தன் இளைய மனைவிக்குக்கல்லுக் கல்லாக நகைகள் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/31&oldid=682335" இலிருந்து மீள்விக்கப்பட்டது