பக்கம்:பனித்துளி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பனித்துளி

வயகப் பெண் பானு திடீரென்று விழித்துக் கொண்டு, காயின் கண்களில் குளமாகத் தேங்கிக் கிடக்கும் கண்ணி ரைப் பார்த்து ஒன்றும் புரியாமல் திகைப்பாள். மனத் தயரைத் மறைக்கும் சக்தி-சகிப்புத் தன்மை சம்பகத்துக்கு எப்படியோ ஏற்பட்டு விட்டது.

கட கடவென்று உருளும் குழவியின் சத்தத்தை மீறிக் கொண்டு மறுபடியும் மீனாட்சி அம்மாள் ஆரம்பித்தாள். “ஆமாம், சங்கரன் ஊருக்குப் போனானே, அவனுடன் நீயும் கொஞ்ச நாள் உன் பிறந்த வீட்டுக்குப் போய் விட்டு வருவது தானே? வருஷக் கணக்காக உனக்கும் உன் குழந்தைக்கும் செய்ய இங்கே கொட்டிக் கிடக்கிறதா?”

என்னதான் பொறுமையுடன் சகித்துக் கொண்டாலும் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறதல்லவா? பொழுது விடிந்து பொழுது போவதற்குள் நாலைந்து முறைகளாவ்து தினம், *உனக்குத் தண்டச் சோறு போடுகிறேன்’ என்று மீனாட்சி குத்திக் காட்டாமல் இருப்பதில்லை. சர்மா சம்பாதித் திருக்கும் சொத்தில் சம்பகத்தின் கணவனுக்கும் பங்கு உண்டு என்பதை மறந்து மீனாட்சி பேசிக் கொண்டிருந் தாள். சம்பகத்தின் கல்யாணத்துக்காக அவள் பிறந்த வீட்டார் அவர்கள். சக்திக்கு மீறியே செலவழித்தார்கள். பாத்திரங்களும், பண்டங்களும், விலை உயர்ந்த நகை களுமாகச் செய்து போட்டார்கள். ஒட்டி யாணம் இல்லாமல் நாட்டுப் பெண் தன் வீட்டுப் படி ஏறக்கூடாது என்று மீனாட்சி தடை விதித்தாள். சம்பகத்தின் தகப்பனார் கையில் இருந்த ரூபாயுடன் கடன் வாங்கி இருபது பவுனுக்கு ஒட்டியானம் செய்து போட்டுப் பெண்னை மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். மருமகன் அயல் நாட்டில் வேறு பெண்ணுடன் தங்கி விட்டான் என்கிற செய்தியைக் கேட்டு மனம் இடிந்து .ே பா ன வ ர், அப்புறம் எழுந்திருக்கவே இல்லை. அவருக்குப் பிறகு, தங்கையின் மாமியார் வீட்டார் மீது ஏற்பட்டிருந்த அளவுக்கு மீறிய வெறுப்பால் சம்பகத்தின் தமையன் அவளைப் பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/38&oldid=682342" இலிருந்து மீள்விக்கப்பட்டது