பக்கம்:பனித்துளி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணி Ab துளி 39

இருந்த கண்ணாடித் துண்டுகளையும், ஜாதகம் எடுக்கும் பொது நேர்ந்த சகுனத் தடையையும் பொருட்படுத்தாமல் மீனாட்சி முன் கட்டுக்கு விரைந்தாள்.

உடைந்த படத்துள், கருணையே வடிவான அம்பிகை யின் வண்ணப் படம் சிறிதும் சேதமடையாமல் இருந்தது.

“தாயே! இந்த குடும்பத்துக்கு யாதொரு கஷ்டமும் வாாமல் காப்பது உன்னுடைய கருணை அம்மா!’ என்று வாய் விட்டு வேண்டிக் கொண்டே சிதறிக் கிடந்த கண்ணாடித் துண்டுகளைப் பெருக்கிச் சுத்தம் செய்வதில் முனைந்தாள் சம்பகம். ‘மைத்துனர் சங்கரனின் குணத்துக்கு அவர் நன்றாக இருக்க வேண்டும்’ என்று அவள் மன அந்தரங்கத்தில் ஒரு வேண்டுகோள் எழுந்தது.

“அவருக்குக் கல்யாண விஷயம் பேச ஆரம்பிப்பதற்கு முன்பு படம் உடைந்ததே! எதன் ஆரம்பமோ இது” என்று வேறு அவள் மனம் குழம்பிக் கொண்டிருந்தது.

டாக்டர் மகாதேவன் சங்கரனின் ஜாத்கத்தை வாங்கிக் கொண்டு அவருடைய பெண் நீலாவின் ஜாதகத்தை மீனாட்சி அம்மாளிடம் கொடுத்தார். சங்கரனைத்தான் நேரில் பல இடங்களில் பார்த்திருப்பதால் பிள்ளையைப் பார்க்க வேண்டும் என்கிற அபிப்பிராயம் தனக்கு இல்லை என்பதாகவும், நீலாவும் சங்கரனை அநேக இடங்களில் பார்த்து தன் சம்மதத்தை அறிவித்ததன் பேரில்தான் இந்த விவாகத்துக்குத் தான் முயற்சி எடுத்துக்கொண்டிருப்பதாக வும் தெரிவித்தார். பெண்ணைப் பார்ப்பதற்கு மீனாட்சி அம்மாளையும், சங்கரனின் தமக்கை ருக்மிணியையும் வரச் சொல்லி அழைத்தார். மரியாதைக்காக மேஜைமீது வைக்கப் பட்ட சிற்றுண்டியைச் சிறிது ருசிபார்த்து விட்டு, ஒரு பெரிய கும்பிடோடு விடை பெற்றுக் கொண்டார் அவர். அந்த ஹாலை விட்டு அவர் வெளியேறி ஐந்து நிமிஷங்கள் வரை யில் புகை போல் சூழ்ந்திருந்தது அவர் குடித்த சுருட்டின் புகை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/41&oldid=682346" இலிருந்து மீள்விக்கப்பட்டது