பக்கம்:பனித்துளி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி - 47

. இது உண்மையா? கனவா?’ என்று பலதடவைகள் தன்னையே கேட்டுக் கொண்டு, சமையலறைக்குள் சென்றாள் காமு. அவள் முகம் நாலைந்து தினங்களாக இழந்திருந்த பழைய சாந்தியை மீண்டும் பெற்றது போல் புன்னகையுடன் காணப்பட்டது.

மீனாட்சியும், ருக்மிணியும் டாக்டர் மகாதேவனின் வீட்டினுள் நுழைந்தவுடனேயே சோபாவில் ஒய்யாரமாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து இருவரும் தி டு க் கி ட் டனர். ஊதா நிற ‘ஸாடின்’ பைஜாமாவும், தங்கநிற வில்க் ஜிப்பாவும் அணித்து, அதன் மேல் மெல்லிய மஸ்லின் மேலாக்கைப் பறக்க விட்டிருந்தாள் நீலா. காதளவு தீட்டி விடப்பட்ட மையும், இரட்டைப் பின்னலும், காதுகளில் ஒளிரும் முத்து லோலாக்கும், உதடுகளில் பூசப்பட்டிருந்த சிவப்புச் சாயமும் அவளை நாகரிகப் பெண்களில் முதன்மையானவள் என்பதைச் சொல்லாமல் விளங்க வைத்தன.

மீனாட்சியையும், ருக்மிணியையும் கண்டதும் அவள் தன் புருவங்களை நெரித்து ஒரு ஆச்சர்யத்தை வரவழைத்துக் கொண்டாள் தன்னுடைய முகத்தில். கூடத்தில் யாரோ வந்திருப்பதைத் தன் தாயாரிடம் தெரிவிப்பதற்காக அவள் பின் கட்டுக்கு விரைந்தாள். சிறிது நேரத்துக் கெல்லாம் டாக்டர் மகாதேவனின் மனைவி சீதாலட்சுமி அவசரமாக ஹாலுக்கு வந்து இருவரையும் உபசாரம் - செய்து வரவேற்றாள். - o

நீங்கள் வரப்போவதாக பத்து நிமிஷங்களுக்கு முன்பு தான் போனில் கூப்பிட்டுச் சொன்னார். எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்” என்றாள் சீதாலட்சுமி. சம்பந்தி வீட்டாரிடமிருந்து பலமான உபசாரங்களை எதிர்பார்க்கும் மீனாட்சி அம்மாளுக்கு முதலில் பெரிய ஏமாற்றமாகவே இருந்தது. தங்கள் வரவை எதிர் பார்ப்பதாகச் சொல்லும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/49&oldid=682354" இலிருந்து மீள்விக்கப்பட்டது